கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: August 2012

Thursday 30 August 2012

பொது வாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை, கிங் மேக்கர் - மக்கள் தலைவர் ஐயா ஜி.கே. மூப்பனார் 11 - ஆம் ஆண்டு (30-08-2012) நினைவஞ்சலி சிறப்பிதழ்



பொது வாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை, கிங் மேக்கர் - மக்கள் தலைவர் ஐயா ஜி.கே. மூப்பனார் 11 - ஆம் ஆண்டு நினைவஞ்சலி


பொது வாழ்வில் தூய்மை
அரசியலில் நேர்மை
கிங் மேக்கர் - மக்கள் தலைவர்
ஐயா ஜி.கே. மூப்பனார்

ஒருவர் வாழும் காலத்திலும், வாழ்ந்த பிறகும் நினைக்கப்பட்டால் - போற்றப்பட்டால் அவரே உண்மையான மக்கள் தலைவராக, வரலாற்றில் இடம் பெறுவார். அந்த வகையில் தலைவர் என்ற பட்டத்திற்கு முழுத் தகுதியுடையவர் ஐயா மூப்பனார். நல்லவர்களை நினைத்துப் பார்த்து, அவர்களின் வழியில் நடப்பதே, அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.

கர்ம வீரர் காமராஜரின் உள் வட்டத்தில் உலா வந்து, பெருந்தலைவரின் நம்பிக்கையைப் பெற்றதால் தான், அவருக்குப் பிறகு ‘வாழும் காமராஜர்’ என்று மக்களால் போற்றப்பட்டார். ஒரு தலைவருக்குரிய தகுதிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். காங்கிரஸ் என்ற பேரியக்கத்தில் 1980 முதல் 1988 வரை பொதுச் செயலாளராக இருந்து, கட்சிக்கு மட்டுமன்றி, நாட்டுக்கே அவர் வழிகாட்டிய நிகழ்வுகள் பல உண்டு.

பதவிகளைத் தேடிப் போய் பதவிப் பித்தர்களாக அரசியல்வாதிகள் அலையும் இன்றைய காலக்கட்டத்தில், ஐயா மூப்பனாரைப் பற்றி இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டியது நமது கடமை. ஏனெனில், அரசியல் என்றால் விரக்தியோடு ஒதுங்கும் அவர்களுக்கு உத்வேகமும், ஆர்வமும் அரசியலில் வர, ஐயாவின் வாழ்க்கை நிச்சயமாகத் தூண்டு கோலாக இருக்கும் என்ற காரணத்தினால், ஐயாவைப் பற்றிய சில தகவல்களை அவரின் நினைவு நாளில் வாசகர்களின் பார்வைக்காக முன் வைக்கிறோம்.

* 1931-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் என்ற சிற்றூரில் ஆகஸ்ட் 19-ந் தேதி பிறந்தார். தந்தை ஆர். கோவிந்தசாமி மூப்பனார். தாயார் சரஸ்வதி அம்மாள். காந்தியடிகளைப் போலவே கஸ்தூரி என்ற பெயர் கொண்ட அம்மையாரை மணந்தார். ஒரு மகன்; ஒரு மகள்.

* சிறிய வயதிலேயே அரசியலில் ஆர்வம். மிகப் பெரிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும், ஒரு பாமரனைப் போல வாழ்ந்தவர். பொது வாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை என்பது அவரது வெற்றுக் கோஷமல்ல; வாழ்க்கைக் கோட்பாடு.

* நேரு குடும்பத்திற்கு மிகவும் நம்பிக்கையானவராக இருந்தவர். அதோடு அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். காங்கிரசில் பெருந்தலைவரின் இடத்தை இட்டு நிரப்பியவர். அவருக்குப் பின் அத்தகைய ஒரு தலைவர் இல்லை என்பதே அவரின் தனிச்சிறப்பு.

* பதவிகள் பலமுறை தேடி வந்த போதும், அதனை உதாசீனப்படுத்தியவர். மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் ஒரு முறை இராணுவ அமைச்சராக பொறுப்பேற்க வற்புறுத்திக் கேட்டுக் கொண்டும், மௌனமாக மறுத்தவர். காமராசரைப் போல தான் ஒரு ‘கிங் மேக்கராக’வே இருக்க வீரும்பினாரே தவிர, ‘கிங்’ ஆக ஒரு போதும் நினைத்ததில்லை.

* ராஜீவ் காந்திக்கும் கடைசி வரை வலக்கரமாக இருந்து, கட்சிப் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளித்தவர். அயல் நாட்டுப் பிரச்சினையிலும் உடன் இருந்து, உறுதுணையாகச் செயல்பட்டவர். 1987-இல் ‘இந்திய - இலங்கை’ உடன்பாட்டிற்காக, அதாவது ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, இலங்கைக்கு ராஜீவ் காந்தியுடன் சென்றார். இலங்கையைத் தவிர, வேறு நாடுகளுக்குச் செல்லாத, அதனை விரும்பாத ஒரே தலைவர், ஒப்பற்ற தலைவர் ஐயா மூப்பனார்.

* நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அதிமுக-வுடன் கூட்டு வேண்டாம் என்ற காரணத்திற்காக பிரிந்து, குறுகிய காலத்தில் தமிழ் மாநிலக் காங்கிரசைத் தோற்றுவித்து, அரசியல் மாற்றத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்தார்.

* அதிமுக பிரிந்தபோது, காங்கிரசை தனித்துப் போட்டியிடச் செய்து, அதிமுக-வின் ஜெயலலிதா அணிக்கு இணையான இடங்களைப் பெறச் செய்தார். அவரே தொடர்ந்து, அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்திருந்தால், காங்கிரஸ் - பெருந்தலைவரின் செல்வாக்கை திரும்பவும் பெற்று, ஆட்சியையும் தக்க வைத்திருக்கும். 1997-இல் மத்தியில் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைத்த போது, கம்யூனிச இயக்கத் தலைவர்கள் ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தும், ஜோதி பாசுவும், காங்கிரஸ் ஆதரவுடன், அவரைப் பிரதமராக இருக்கும்படிக் கேட்டுக் கொண்டனர். வழக்கம் போல, நாட்டின் மிக உயரிய பதவி கிடைத்தும் மறுத்து, தன்னை ஒரு மாபெரும் தலைவராக அடையாளம் காட்டினார்.

* இந்திரா காந்தி - எம்.ஜி.ஆர். இடையிலான உறவுக்குப் பாலமாகத் திகழ்ந்தவர். அரசியலில் அவருக்கு யாரும் எதிரிகள் கிடையாது. கண்ணியமான, பழுத்த அரசியல்வாதியாகவே வாழ்ந்தவர். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்தவர். அவர் கருத்துகளினால் மோதல் நடத்தினாரே தவிர, என்றைக்கும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டதில்லை. அதனால் தான் கட்சி வேறுபாடின்றி அனைவரும் அவரை மதித்தனர்.

* பல பேருக்கு அரசியல் வாழ்வு கொடுத்து, பெரிய பதவி பெற்றுக் கொடுத்து அழகு பார்த்தவர். காமராஜரைப் போலவே, மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். தமிழ் மாநில காங்கிரசிலிருந்து பிரிந்து கட்சி நடத்தினாலும், உள்ளத்தில் கடைசி வரை காங்கிரஸ்காரராகவே இருந்தவர்.

* பொதுச் சேவை, விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு உடையவர். கர்நாடக இசையை ரசிப்பதில் மிகவும் உற்சாகம் அடைவார். அதனால் தான் திருவையாறு தியாகராஜர் உற்சவக் கமிட்டித் தலைவராக இருந்தார்.

* பல்வேறு புத்தகங்களை படிப்பது பொழுதுபோக்காக மட்டுமில்லாமல், தன்னைப் பக்குவப்படுத்தி, பொது வாழ்க்கைக்கு வருபவர்களை பக்குவமுள்ளவர்களாக மாற்றுவதற்கும் அதனைப் பயன்படுத்தினார். காங்கிரஸ்காரர் என்பதற்கு ஒரு ராஜமுத்திரையாக வாழ்ந்து காட்டியவர்.

* 30.08.2001 இல் அவர் மறைந்தாலும், அவரின் நினைவுகள் மக்கள் மத்தியில் மறையவில்லை. இப்படி ஒரு மக்கள் தலைவர் இனி கிடைப்பாரா? என்ற ஏக்கத்தில் இன்றும் அவரின் நினைவுகளில், மக்களின் விழிகளில் நீர் பெருக்கெடுக்கிறது.

30-08-2012 issue







Friday 24 August 2012

வாழும் வள்ளல்! வாழும் காமராஜரே! புதுவை அரசின் மாண்புமிகு முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்களோடு சந்திப்பு

பாண்டிச்சேரி  மாண்புமிகு ந. ரங்கசாமி அவர்களை   இன்றைய வணிகத்தின்  வெளியீட்டாளர் -  ஆசிரியரும், இந்தியன் பிரஸ் கிளப்-ன் பொதுச் செயலாளருமான அரிமா. இரா. பொன்முருகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்தபோது  எடுத்த படம். உடன் பாண்டிச்சேரியின் தலைமை நிருபரும், திரைப்பட இயக்குநருமான சிரஞ்சீவி அனிஸ் உள்ளார்.

மாண்புமிகு நலம்  மற்றும் சுற்றுல்லா துறை அமைச்சர் ராஜவேலு அவர்களை இன்றைய வணிகத்தின் வெளியீட்டாளர் -  ஆசிரியரும்,  இந்தியன் பிரஸ் கிளப்-ன் பொதுச் செயலாளருமான அரிமா. இரா. பொன்முருகன் மரியாதை நிமித்தமாக சந்தித்தப்போது எடுத்த படம். உடன் பாண்டிச்சேரியின் தலைமை நிருபரும், திரைப்பட இயக்குநருமான சிரஞ்சீவி அனிஸ் உள்ளார்.

மாண்புமிகு நலம்  மற்றும் சுற்றுல்லா துறை அமைச்சர் ராஜவேலு அவர்கள் இன்றைய வணிக நாளிதழை விரும்பிப் படிக்கும் காட்சி. உடன் இன்றைய வணிகத்தின்  வெளியீட்டாளர் -  ஆசிரியரும்,  இந்தியன் பிரஸ் கிளப்-ன் பொதுச் செயலாளருமான அரிமா. இரா. பொன்முருகன் மரியாதை நிமித்தமாக சந்தித்தப்போது எடுத்த படம். உடன் பாண்டிச்சேரியின் தலைமை நிருபரும், திரைப்பட இயக்குநருமான சிரஞ்சீவி அனிஸ் உள்ளார்.

பாண்டிச்சேரி  மாண்புமிகு ந. ரங்கசாமி அவர்கள்  இன்றைய வணிக இதழை ஆர்வமுடன் கேட்டு ஆதரவ அளிக்கும் காட்சி. உடன்   இன்றைய வணிகத்தின்  வெளியீட்டாளர் -  ஆசிரியரும்,  இந்தியன் பிரஸ் கிளப்-ன் பொதுச் செயலாளருமான அரிமா. இரா. பொன்முருகன்  சந்தித்தப்போது எடுத்த படம். உடன் பாண்டிச்சேரியின் தலைமை நிருபரும், திரைப்பட இயக்குநருமான சிரஞ்சீவி அனிஸ் உள்ளார்.

பாண்டிச்சேரி  மாண்புமிகு ந. ரங்கசாமி அவர்கள் இன்றைய வணிகம் நாளிதழை விரும்பி படிக்கும் காட்சி. உடன் பாண்டிச்சேரியின் தலைமை நிருபரும், திரைப்பட இயக்குநருமான சிரஞ்சீவி அனிஸ் உள்ளார்.