லாபம் கொழிக்கும் கூடை பொம்மை தயாரிப்பு!
சந்தோஷமான தருணங்களில், ஒருவருக்கு
வழங்கும் பரிசுப்பொருட்கள் அந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக மாற்றும். பரிசுப்பொருள்
விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெறுபவர் மனதைக் கவர்வதாக
இருக்க வேண்டும். விலை குறைந்த, அதே நேரம் பாரம்பரியம், நவீனம் கலந்து சிறப்பாக வடிவமைக்கப்படும் கூடை
பொம்மைகள், பரிசுப்பொருளாக
வழங்க நல்ல தேர்வு. கூடை பொம்மைகள் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்
என்கிறார் கோவை காந்திபுரத்தை சேர்ந்த பத்மா. அவர் கூறியதாவது:
15 ஆண்டுகளுக்கு முன்பு கைவினைப்பொருட்கள் செய்வதில் ஆர்வம்
ஏற்பட்டது. பரிசு பொருள் விற்கப்படும் பொம்மைகள் செய்து கடைகளுக்கு விற்றேன்.
படிப்படியாக பல்வேறு வகையான பொம்மைகளை தயாரித்தேன். திருப்பூர் பனியன் ஏற்றுமதி
நிறுவனங்களிடம் வெளிநாட்டு வர்த்தகர்கள் ஆர்கானிக் காட்டன் பொம்மைகள் செய்து தர
ஆர்டர் கொடுத்தனர். ஆர்டர் எடுத்த நிறுவனங்கள் என்னிடம் பொம்மைகள் தயாரித்து
வாங்கி ஏற்றுமதி செய்தனர். இதன் மூலம் தொழில் பெருகியது.
பொதுவாக பொம்மைகள்
செய்வது கை தையல் மூலம் தான். உற்பத்தி அதிகம் செய்ய வேண்டி வந்ததால் பவர் தையல்
மெஷின் மூலம் பெரிய பொம்மைகளை தைத்தும், மெஷினில் தைக்க முடியாத சிறிய பொம்மைகளை மட்டும்
கை தையல் மூலமும் தயாரித்து வருகிறேன். 4 பேர் பணிபுரிகின்றனர். மாதம் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை
மதிப்பிலான பொம்மைகள் உற்பத்தி செய்கிறேன். 25 சதவீத லாபம் உள்ளது.
ஒரே மாதிரியான
பொம்மை தயாரிப்பதை விடுத்து புதுமையான வடிவத்தில் தயாரிக்க வேண்டும். பொம்மையை
கூடையில் வைத்து கொடுத்தால் புதுமையாக இருக்கும். அதையும் பொக்கே போல் கொடுத்தால்
நவீனமாக இருக்கும்.கைப்பிடி உள்ள கூடைக்குள் தலையை மட்டும் காட்டியவாறு இருக்கும்
நாய்க்குட்டி பொம்மைகள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
கூடை பொம்மைகளை
அடிப்படையாக கொண்டு மேலும் பல புதுமைகள் புகுத்தலாம். ஒன்றில் இருந்து இன்னொன்றை
உருவாக்கலாம். பரிசு பொருட்களை பொறுத்தவரை புதிதாக இருந்தால் வரவேற்பு அதிகமாக இருக்கும்.
இவ்வாறு பத்மா கூறினார்.
முதலீடு:வீட்டின்
ஒரு அறை போதுமானது. சார்ட் பேப்பர், வெல்வெட் துணி வெட்ட ஒரு டேபிள் (ரூ.4 ஆயிரம்), மூலப்பொருட்கள்
மற்றும் தயாரித்த பொருட்களை வைக்க அலமாரி (5 ஆயிரம்), பெரிய கத்தரி 1, சிறிய கத்தரி 2 (ரூ.400), பிளாஸ்டிக் டிரே 2 (ரூ.100) , செலோ டேப்
ஸ்டாண்ட் (ரூ.150). மொத்தம் ரூ.9,650.
உற்பத்தி செலவு: ஃபர்
கிளாத், அதன்
திடத்திற்கேற்ப மீட்டர் ரூ.300 முதல் ரூ.350 வரை. செயற்கை பஞ்சு (பைபர் காட்டன்) கிலோ ரூ.100, (ஒரு மீட்டர் ஃபர்
கிளாத், ஒரு கிலோ செயற்கை
பஞ்சு மூலம் 100 பொம்மைகள் செய்யலாம்.), கூடை விலை அதன் அளவுக்கேற்ப ஒன்று ரூ.5 முதல் ரூ.10 வரை. பொக்கே
பேக்கிங் ஷீட் (சலபன் பேப்பர்) ஒன்று ரூ.3, ஒரு பொம்மைக்கான மூக்கு, கண் பட்டன்கள் ரூ.2. ரிப்பன் ரோல் ரூ.1.
சிறிய கூடை பொம்மை
செய்ய ரூ.20ம், பெரியவை செய்ய
கூடை மற்றும் பொம்மையின் அளவுக்கேற்ப ரூ.40 வரை செலவாகும். ஒரு நாளைக்கு (8 மணி நேரம்) சிறிய
பொம்மைகள் 40, பெரியவை 20 தயாரிக்கலாம். ஒருநாள் உற்பத்தி செலவு ரூ.800.மாதம் 25 நாளில் ஆயிரம் சிறிய கூடை பொம்மை அல்லது 500 பெரிய கூடை பொம்மை
உற்பத்திக்கு ரூ.20 ஆயிரம் தேவை.
வருவாய்: சிறிய கூடை
பொம்மை ரூ.30, பெரியது ரூ.60க்கு விற்கலாம். மாத வருவாய் ரூ.30 ஆயிரம். செலவு ரூ.20 ஆயிரம். லாபம் ரூ.10 ஆயிரம். லாபம்
உழைப்பு கூலியாக கிடைக்கிறது.
சந்தை வாய்ப்பு: தற்போது
சிறிய ஊர்களில் கூட பரிசு பொருட்கள் கடைகள் வந்து விட்டன. தயாரித்த பொம்மைகளை
பேன்சி ஸ்டோர், கிப்ட் கடைகள் ஆகியவற்றுக்கு விற்கலாம். சிறிய கூடை பொம்மையை
ரூ.30க்கு வாங்கும்
கடைக்காரர்கள் ரூ.50க்கு குறையாமல் விற்கிறார்கள். நேரடியாக விற்றும் லாபம்
சம்பாதிக்கலாம். கூடை பொம்மை பொக்கே பார்க்க ஆடம்பரமாக இருக்கும். ஆனால் விலை
குறைவு என்பதால் நிறைய பேர் விரும்பி வாங்குகின்றனர். இதனால் சந்தை வாய்ப்புகள்
நன்றாக உள்ளது. கூடை பொம்மை மட்டுமல்லாமல் பல்வேறு ரகங்களில் பொம்மைகள் தயாரித்து
விற்கலாம். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
பொம்மை தயாரிக்க
பயிற்சி : கோவை வேளாண் பல்கலைக்கழகம், கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில்
பெண்களுக்கு மட்டும் பொம்மை தயாரிப்பு பயிற்சி கற்பிக்கப்படுகிறது. மற்ற
மாவட்டங்களில் பொம்மை தயாரிக்க பயிற்சி மையங்கள் பல உள்ளன.
தயாரிப்பது எப்படி?
கூடை பொம்மை களை
மார்பு வரை தயாரித்தால் போதுமானது. நாய், பூனை, கரடி, குரங்கு குட்டிகள், குழந்தை வடிவங்களில் தேவையான அளவுகளில்
பொம்மைகளை தயாரிக்கலாம்.பொம்மையை உருவாக்க, தேவையான தையல் அளவுகளை சார்ட் பேப்பரில்
உருவாக்கி கொள்ள வேண்டும். அது கை, உடல், முகம் ஆகிய பாகங்களை கொண்டிருக்கும். அவற்றை கொண்டு தைக்க
வேண்டிய ஃபர் துணிகளின் பின்புறம் வைத்து மார்க்கர் பேனாவால் அவுட்லைன் வரைந்து
வெட்டி கொள்ள வேண்டும்.
வெட்டியவற்றின்
உட்புறமாக கை தையல் போட வேண்டும். அதை கெட்டி தையல் என்பார்கள். தைக்காமல் விட்ட
பகுதி வழியாக செயற்கை பஞ்சை சமமாக பரவும்படி திணித்து உள்புறத்தை நிரப்ப வேண்டும்.
பொம்மைக்கு கண், மூக்கு பட்டன்களை பொருத்த வேண்டும். சில பொம்மைகளுக்கு கூடுதலாக
காது, வாய்
பட்டன்களையும் பொருத்தலாம். பொம்மையின் கீழ் பகுதி வட்டமாக திறந்திருக்கும், அதை கூடையின் மேல்
திறப்பை மூடும் அளவிற்கு வட்டமாக வெட்டிய சார்ட் பேப்பர் துண்டுகளில் வைத்து, விளிம்புகளில் பசை
தடவி ஒட்டி மூட வேண்டும். இப்போது பொம்மை தயார்.
பின்னர், ரெடிமேடாக வாங்கிய
பிரம்பு கூடையின் கைப்பிடி, மேல், கீழ் புற விளிம்பு ஆகியவற்றில் சன்னமான கலர் ரிப்பன்களை சுற்ற
வேண்டும். கூடை மேல் ஏற்கனவே தயாரான பொம்மைகளை வைத்தால் கூடை பொம்மை தயார். கிப்ட்
பேக்கிங் ஷீட்டில் கூடை பொம்மையை வைத்து பூக்களை கொண்டு பொக்கே செய்வது போல் பேக்கிங்
செய்ய வேண்டும். செலோ டேப் கொண்டு ஒட்டி, பேக்கிங் ஷீட்டில் ரிப்பன் கட்டினால் கூடை பொம்மை
பொக்கே தயாராகி விடும்.
………..
காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்!
‘சர்க்கரை, ரத்த அழுத் தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்
மட்டுமின்றி பலரும் உடல் நலம் பேணும் பிரத்யேக காலணிகளை பயன்படுத்துகி றார்கள்.
அவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார் கோவை பூ
மார்க்கெட்டை சேர்ந்த கர்ணன். அவர் கூறியதாவது: 5ம் வகுப்பு வரை தான் படித்தேன். 15 வயதில் சென்னையில்
ஒரு காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கு தொழிலை கற்றுக்கொண்டேன்.
உடல்நலம் பேணும் பிரத்யேக காலணிகளுக்கு கிராக்கி இருப்பதை அறிந்து, அதை தயாரிக்க
தொடங்கினேன்.
பல்வேறு
மருத்துவமனைகளை அணுகி எனது முகவரியை கொடுத்தேன். அங்கு சிகிச்சைக்கு வருபவர்கள்
எனக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். அதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. இந்த தொழில்
எளிதானது. சிறிய முதலீட்டில் துவங்க ரூ.40 ஆயிரம் போதும். இயந்திரங்கள் பொருத்தி பெரிய
அளவில் துவங்க ரூ.3 லட்சம் தேவை. மருத்துவமனைகளில் டிஸ்பிளே செய்து ஆர்டர்
பிடிக்கலாம். மருத்துவமனை ஸ்டோர்களுக்கு குறைந்த லாபத்தில் விற்கலாம்.
மருத்துவமனை அனுமதி
பெற்று உள் நோயாளிகளிடம் நேரில் விற்கலாம். இந்த செருப்புகளை நோயாளிகள் மட்டுமல்ல; மற்றவர்களும்
பயன்படுத்தலாம். செருப்பு கடைகளிலும் விற்கலாம். ஆர்டர் குறைவாக இருக்கும் போது
மற்ற செருப்புகளையும் தயாரித்தால் லாபம் பெருகும்.
தேவையான பொருட்கள்
செருப்பின்
அடிப்பாகத்துக்கு தேவையான ரப்பர் ஷீட் (ஒரு ஷீட் ரூ.450) அடிப்பாகத்தின்
மேல் அடுக்காக பயன்படும் பாலிமர் கவர் ஷீட் (ஒரு ஷீட் ரூ.150), செருப்பின்
ஸ்டிராப் செய்ய சிந்தடிக் ஷீட் (ஒரு ஷீட் ரூ.280) ஸ்டிராப்களை இணைக்கும் வெல் க்ரோவ் (மீட்டர் ரூ.30) செருப்பின்
முன்பாகத்தில் மட்டும் ஒட்டும் ரப்பர் பீடிங் பன்வர் (ஒரு ஷீட் 800), பசை, நூல்.
கட்டமைப்பு: 10க்கு 16 அடி நீள, அகலம் கொண்ட இடம்
போதுமானது.
கிடைக்கும் இடங்கள்
காலணி தயாரிக்க
தேவையான பொருட்கள் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் கிடைக்கின்றன.
பயன்கள்
சர்க்கரை நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாது. காயம் படாமல் பார்த்து
கொள்ள வேண்டும். சர்க்கரை நோயளிகள் காலில் காயம் ஏற்படாமல் இருக்க பீடிங் பன்வர்
பொருத்திய காலணிகள் உதவியாக இருக்கின்றன. எதன் மீதாவது மோதினால் காலில் அடிபடாமல்
இவை காக்கின்றன.பிஸியோதெரபி, அக்குபஞ்சர் சிகிச்சையில் உள்ளவர்களின் பாதங்களுக்கு அழுத்தம்
கொடுக்கவும், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்கவும்
பாலிமர் கவர் ஷீட் பொருந்திய காலணிகள் நல்லது. இதை அணிய டாக்டர்கள்
பரிந்துரைக்கின்றனர். பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இவற்றுக்கு
கிராக்கி அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப உற்பத்தியாளர்கள் இல்லை. கூலியாட்கள்
வைத்து உற்பத்தியை அதிகமாக்கினால் வருவாய் பெருகும்.
முதலீடு
இட வாடகை அட்வான்ஸ்
ரூ.10 ஆயிரம், தையல் மெஷின்
(ரூ.6 ஆயிரம்), அலமாரி 2
(ரூ.8 ஆயிரம்), மரத்தால் ஆன
மாதிரி கால் 12 வகை அளவுகள், கொட்டல் 1, உளி 1,
கத்தரிக்கோல் 3, பல்வேறு
பாத அளவுகளை கொண்ட
சார்ட்
ஆகிய மூலதன
பொருட்கள் (ரூ.7 ஆயிரம்). மொத்த முதலீடு ரூ.31 ஆயிரம்.
உற்பத்தி செலவு
அறை வாடகை ரூ.3 ஆயிரம், மின் கட்டணம் ரூ.300, ஒரு நாளில் ஒரு
நபர் 4 ஜோடி காலணிகள்
தயாரிக்கலாம். மாதம் 25 நாளில் ஆண்களுக்கான காலணி 100 ஜோடி அல்லது பெண்களுக்கான காலணி 150 ஜோடி
தயாரிக்கலாம். ஆண்கள் காலணி ஒன்று தயாரிக்க உற்பத்தி பொருள் மற்றும் உழைப்பு கூலி
உள்பட ரூ.150 செலவாகும்.
பெண்கள் காலணி தயாரிக்க ரூ.100 செலவாகும். எந்த செருப்பு தயாரித்தாலும் ரூ.15 ஆயிரம் தேவை.
மொத்த மாத செலவு
ரூ.18,300.
வருவாய்
ஆண்கள் காலணி
குறைந்தபட்சம் ரூ.250க்கும், பெண்கள் காலணி ரூ.170க்கும் விற்கிறது. மாத வருவாய் ரூ.25 ஆயிரம். செலவு ரூ.18,300.
லாபம் ரூ.6,700. ஓரளவு
அனுபவம் கிடைத்த பிறகு தொழிலை விரிவுபடுத்தினால் அதிக லாபம் கிடைக்கும்.
தயாரிப்பது எப்படி?
ரப்பர்ஷீட், பாலிமர் கவர் ஷீட்
ஆகியவற்றில் தேவைப்பட்ட அளவில் அடிப்பாகத்தை வரைந்து, வெட்டி
எடுக்கவேண்டும். இரண்டையும் ஒன்றின் மீது ஒன்றாக ஒட்ட வேண்டும். இப்போது
அடிப்பாகம் தயார். சிந்தடிக் ஷீட்டில் காலணியின் மாடலுக்கேற்ப இருபுற ஸ்டிராப்களை
வெட்டி எடுக்க வேண்டும். அதை தையல் மெஷினில் வைத்து தைக்க வேண்டும். இப்போது
மேல்பாகம் தயார். இதை அடிப்பாகத்தில் இணைக்க வேண்டும்.
அதற்கு
அடிப்பாகத்தின் 2 அடுக்குகளுக்கு இடையில் பிளவு ஏற்படுத்தி உள்ளே பசை தடவி மேல்
பாகத்தை திணித்து இறுக்க வேண்டும். பின்னர் காலணியின் முன்பாகத்தில் மட்டும்
கீழ்பாகத்தின் 2 அடுக்குகளை இணைக்கும் இடத்தில் பீடிங் பன்வர் ஒட்டவேண்டும்.
கடைசியாக செருப்பின் மேல்பாகத் தில் வெல்க்ரோவ் ஒட்ட வேண்டும்.
பயிற்சி பெற...
டிப்ளமா இன் லெதர்
டெக்னாலஜி படிப்பு உள்ளது. இதன் மூலம் தோல் பதப்படுத்துதல், காலணி தயாரிப்பு
ஆகியவற்றை கற்று கொள்ளலாம். அல்லது காலணி உற்பத்தி கூடங்களில் 3 மாதத்தில் அனுபவ
ரீதியாக கற்று கொள்ளலாம்.
…………….
பேப்பர் தட்டு தயாரிப்பில் பிரமாத லாபம்
சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர்
தட்டுகள். ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும்
இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை மாவட்டம்
பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையத்தில் உள்ள கற்பகவிருட்சம் மகளிர் சுய உதவி
குழுவை சேர்ந்த சுகுணா. அவர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் குழுவை
துவக்கினோம். உறுப்பினர்கள் 5 பேர் சேர்ந்து, பேப்பர் பிளேட் தயாரிக்க பயிற்சி பெற்றோம். வங்கியில் ரூ.5 லட்சம் கடன்
வாங்கி தொழிலுக்கு தேவையான மெஷின்களை நிறுவினோம்.
5 பேரும் பக்கத்து பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் என்பதால்
வீட்டு வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு பேப்பர் பிளேட் தயாரிக்கும் பணிகளை
தொடங்குவோம். ஒருவர் பேப்பரை கட்டிங் செய்யும் இயந்திரத்தையும், மற்றொருவர் பிளேட்
தயாரிக்கும் மெஷினையும் இயக்குவோம். மற்ற 2 பேர் பேக்கிங் செய்வார்கள். உற்பத்தியோடு
விற்பனையையும் நாங்களே கவனிக்கிறோம். மின் தடை இல்லாமல் இருந்தால், ஒரு நாளில் 10 ஆயிரம் பிளேட்
தயாரிக்கலாம். ஒரு பிளேட்டுக்கு 20 பைசா லாபம். மாதம் ரூ.18 ஆயிரம் வங்கிக்கு செலுத்துகிறோம். தினசரி
சம்பளமாக நாங்கள் தலா ரூ.100 எடுத்து கொள்கிறோம். அலுவலகம், வீடு ஆகியவற்றில் நடைபெறும் விசேஷங்களில்
பேப்பர் பிளேட் பயன்பாடு அதிகரித்து வருவதால் தயாரித்தவுடன் விற்று விடுகிறது.
பொள்ளாச்சி
தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளிலும் எங்கள் பேப்பர் தட்டுகளை விற்று வருகிறோம்.
இதனால் நல்ல லாபம் கிடைக்கிறது. பெண்கள் வீட்டில் இருந்தபடியே செய்வதற்கு ஏற்ற
தொழில் இது. நீண்ட நாள் ஸ்டாக் வைத்து விற்கலாம். நல்ல வருமானமும் கிடைக்கும்.
கட்டமைப்பு: இயந்திரங்கள் நிறுவ 10 அடி நீள, அகலத்தில் ஒரு அறை, தேவையான
பேப்பர், உற்பத்தியான பிளேட்களை
இருப்பு வைக்க மற்றொரு அறை, 1.5 ஹெச்பி மின் இணைப்பு (ரூ.3 ஆயிரம்). முதலீடு: பேப்பர் பிளேட் இயந்திரம் 1 (ரூ.1.4 லட்சம்), பேப்பரை 5, 6, 7, 8, 9, 10, 12 ஆகிய
இஞ்ச் அளவுகளில் வட்ட வடிவில் வெட்ட பிளேடுகள் மற்றும் அந்த அளவுகளில் பிளேட்
செய்வதற்கான டை 7 (ரூ.54 ஆயிரம்) என மொத்தம் முதலீடு ரூ.1.94 லட்சம்.
உற்பத்தி பொருட்கள்:
பாலிகோட் ஒயிட் பேப்பர் (திக் ரகம் டன் ரூ.72 ஆயிரம், நைஸ் ரகம் ரூ.40 ஆயிரம்) சில்வர் திக் (டன் ரூ.38 ஆயிரம்), சில்வர் நைஸ் (டன்
ரூ.30 ஆயிரம்), புரூட்டி பேப்பர்
திக் (டன் ரூ.50 ஆயிரம்), நைஸ் ரகம் (ரூ.38 ஆயிரம்) மற்றும் பேக்கிங் கவர், லேபிள், செலோ டேப். கிடைக்கும் இடங்கள்: பேப்பர்
பிளேட் மெஷின் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களிலும், பேப்பர்களில் பாலிகோட் ஒயிட், சில்வர் திக்
ஆகியவை சிவகாசி, சில்வர் நைஸ் டெல்லி, புரூட்டி பேப்பர் திக், நைஸ் ஆகியவை
கேரளாவிலும் மலிவாக கிடைக்கின்றன.
உற்பத்தி செலவு:
வாடகை, மின்கட்டணம், உற்பத்தி
பொருட்கள், கூலி உள்பட
பாலிகோட் ஒயிட் 6 இஞ்ச் பேப்பர் பிளேட் தயாரிக்க 20 பைசா, 7 இஞ்ச் தயாரிக்க 45 பைசா, 8 இஞ்ச் 60 பைசா, 10 இஞ்ச் ரூ.1, சில்வர் திக் 8 இஞ்ச் ரூ.1, 10 இஞ்ச் ரூ.1.30, சில்வர் நைஸ் 6 இஞ்ச் 25 பைசா, 7 இஞ்ச் 45 பைசா, புரூட்டி பேப்பர் 8 இஞ்ச் ரூ.1, 10 இஞ்ச் ரூ.1.30 செலவாகிறது. 10 ஆயிரம் பிளேட்
தயாரிக்க ஆகும் செலவு ரூ.7700. மாதத்தில் 25 நாளில் 2.5 லட்சம் பிளேட் உற்பத்திக்கு ரூ.1.92 லட்சம் தேவை.
வருவாய்: ஒரு
பேப்பர் பிளேட்டுக்கு 20 பைசா லாபம் கிடைப்பதால் தினசரி லாபம் ரூ.2 ஆயிரம். 25 நாளில் ரூ.50 ஆயிரம் லாபம்
கிடைக்கும். விற்பனை வாய்ப்பு: கேட்டரிங் நடத்துபவர்கள், சமையல் ஏஜென்ட்கள், விழாக்கள், அன்னதான நிகழ்ச்சி நடத்துபவர்கள் பேப்பர்
பிளேட்களை வாங்குகிறார்கள். அவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். கடைகளுக்கும்
சப்ளை செய்யலாம். தரம், குறைந்த லாபம், நேரடி அணுகுமுறை இருந்தால் நிறைய ஆர்டர் கிடைக்கும்.
தயாரிப்பது எப்படி?
பேப்பர் பிளேட் இயந்திரம் இரண்டு பாகங்களை கொண்டது. ஒன்று
கட்டிங் மெஷின், இரண்டாவது பேப்பர் பிளேட் டை மெஷின். இரண்டும் மின்சாரத்தில்
இயங்கக் கூடியவை. தயாரிக்க வேண்டிய பிளேட்டின் அளவுக்குரிய கட்டிங் வளையத்தை
கட்டிங் மெஷினில் பொருத்த வேண்டும். கட்டிங் வளையத்துக்கு கீழ் பிளேட்டுக்குரிய
பேப்பரை மொத்தமாக வைத்து இயக்கினால் கட்டிங் செய்யப்படும். வட்ட வடிவில்
பேப்பர்கள் தனித்தனியாக கிடைக்கும். நைஸ் ரக பேப்பராக இருந்தால் 100 எண்ணிக்கை வரையும்
திக் ரகமென்றால் 30 முதல் 40 வரை கட்டிங் செய்யலாம்.
கட் செய்த
பேப்பர்களை பிளேட் டை மெஷினில் உள்ள அச்சின் மேல் வைத்து இயக்கினால் பேப்பரின்
ஓரங்கள் வளைந்து பிளேட்களாக மாறும்.
பேப்பரை பிளேட்டாக
வளைக்க டை மெஷின் 5 டிகிரி வெப்பம் இருக்க வேண்டும். அதற்கு உற்பத்தியை துவக்கும்
முன்பு டை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும்.
நிமிடத்திற்கு 30 பிளேட் தயாராகும்.
40 பிளேட்களாக
பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி செலோ டேப் ஒட்டி பேக்கிங் செய்ய வேண்டும். இப்போது
பேப்பர் பிளேட் விற்பனைக்கு தயார்.
பேப்பர் பிளேட் இயந்திரங்களை விற்பனையகங்களில் பார்வையிடலாம்.
அரை மணி நேரத்தில் இயக்குவதை கற்றுக் கொள்ளலாம். எளிய தொழில்நுட்பம், சுற்றுச்சூழல்
பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த தொழிலுக்கு மதிப்பு கூடி வருவதால்
வங்கிகள் எளிதாக கடன் உதவி வழங்குகின்றன.
…………….
கலக்கல்
லாபம் தரும் சீட் கவர் தயாரிப்பு
வாகனங்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது. வாகனங்களின் சீட் கவர் தயாரித்து நேரடியாகவோ கடைகளுக்கோ விற்றால் லாபம்
சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை டவுன்ஹாலை சேர்ந்த அப்துல் ரசாக். அவர் கூறியதாவது
: வாகனங்களின் சீட் கவர் தயாரிக்கும் கடையில் 15 ஆண்டாக வேலை பார்த்தேன். சம்பளம் குடும்ப
தேவைக்கு போதவில்லை. கடந்த 5 ஆண்டுக்கு முன்பு சொந்தமாக சீட் கவர் தயாரிக்கும் கடை
துவங்கினேன். இத்தொழிலில் பலர் இருந்தாலும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை
பெருகி வருவதால், வாகனங்களில் சீட் கவர் மாற்றும் தேவை நிரந்தரமாக உள்ளது. இதனால்
தொடங்கியது முதலே தொழில் சீராக நடந்து கொண்டிருக்கிறது. இருசக்கர வாகனங்கள்
பிராண்ட்களுக்கேற்ப சீட்கள் ஒன்றுக்கொன்று சிறிய அளவில் மாற்றம் இருக்கும்.
பல்வேறு இரு சக்கர வாகன சீட்களின் மாதிரிகளை நாம் வைத்திருந்தால் உடனடியாக
தயாரித்துவிடலாம்.
சீட் கவரில் வாடிக்கையாளர்கள் டிசைன்கள், எழுத்துகளை வடிவமைக்க விரும்புகின்றனர். டிசைன் வேலைப்பாட்டுக்கேற்ப கூலி கிடைக்கும். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் சீட் கவரில் டிசைன்களை விரும்புகிறார்கள். பெண்கள் டிசைன் இல்லாத சீட் கவர்களை விரும்புகின்றனர். சீட் கவர் தயாரிக்க பெரிய அளவில் பயிற்சிகள் தேவை இல்லை. ஓரளவு தையல் தெரிந்தவர்களாக இருந்தால் போதும். இருசக்கர வாகன சீட் கவர் தயாரிப்பில் போதிய அனுபவம் இருந்தால் 4 சக்கர வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களுக்கு சீட் கவர் செய்து கொடுக்கலாம். நல்ல வருவாய் கிடைக்கும்.
இத்தொழிலை பெண்கள் வீட்டிலேயே செய்ய முடியும். மொத்த சீட் விற்பனை கடைகளில் ஆர்டர் எடுத்து செய்யலாம் அல்லது வெட்டி கொடுக்கும் பாகங்களை கொண்டு தைத்து கொடுக்கலாம். மழை, வெயிலில் நிறுத்தப்படுவதால், சீட் கவர்கள் அடிக்கடி கிழிந்து விடுகிறது. ஒரு சீட் கவர் 9 மாதம் வரை உழைக்கும். இதனால் நிரந்தர வேலை வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அப்துல் ரசாக் கூறினார்.
தயாரிக்கும் முறை
இரு சக்கர வாகனத்துக்குரிய சீட்டின் மாதிரி வடிவத்தை வைத்து, சீட்டின் மேல், இடது மற்றும் வலது புற பாகங்களை ரோசிலின் சீட்டில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை பார்டர் டேப் அல்லது பீடிங் வயரால் இணைத்து தைக்க வேண் டும். அதை ஸ்பாஞ்ச் மீது வைத்து இடது, வலது புறங்கள் வழியாக கீழ் புறம் வரை கவரை இறுக்க மாக கொண்டு வர வேண் டும். இப்போது ரோசிலின் சீட்டை ஸ்பாஞ்ச் மீது கன் சூட்டரால் அமுக்கினால் சீட் கவர் தயார்.
டிசைன் சீட் கவர் தயாரிக்க, டிசைன் இடம்பெறும் பகுதிகளுக்கு புள்ளி ரெக்சின் சீட் அல்லது சிம்பொனி சீட்டை தேவையான வண்ணங்களில், டை மூலம் வெட்டி கொள்ள வேண்டும். அதற்கு வடிவமைப்பு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். வெட்டிய டிசைன்களை ஏற்கனவே தயாரித்த சீட்டில் இணைத்து தைக்க வேண்டும். (சீட் கவர் பொருத்துவதற்கு முன்பு, இரு சக்கர வாகனத்தில் இருந்து பழைய சீட்டை டூல் கிட் மூலம் கழற்ற வேண்டும். அதில் ஸ்பாஞ்சின் மீதுள்ள கவரை அகற்ற வேண்டும்.)
முதலீடு: டிசைன் வடிவமைப்பு இயந்திரம் ரூ.1.25 லட்சம், மின் தையல் இயந்திரம் ரூ.13 ஆயிரம், கம்ப்ரசருடன் இணைந்த கன் சூட்டர் ரூ.16 ஆயிரம், டூல் கிட் ரூ.2 ஆயிரம், பல்வேறு டிசைன் டை ரூ.15 ஆயிரம், சீட் கவர் மாதிரிகள் ரூ.4 ஆயிரம், கத்திரி 2 ரூ.1000, 10க்கு 16 அடி அளவுள்ள அறை அட்வான்ஸ் ரூ.15 ஆயிரம், ஒரு டேபிள் ரூ.4 ஆயிரம், ரேக் ரூ.4 ஆயிரம் என ரூ.2 லட்சம் தேவை.
உற்பத்தி பொருட்கள்: ரோசிலின் சீட், புள்ளி ரெக்சின் சீட், சிம்பொனி சீட், ஸ்பாஞ்ச், பீடிங் வயர், கருப்பு நிற நூல், பின்.
கிடைக்கும் இடங்கள்: டிசைன் வடிவமைப்பு இயந்திரம், கன்சூட்டர் ஆகியவை சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கிறது. மற்ற முதலீட்டு பொருள்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கும். உற்பத்தி பொருட்கள் பிரத்யேக ரெக்சின் கடைகளில் கிடைக்கிறது.
உற்பத்தி செலவு (மாதத்துக்கு): ஒரு நாளில் 8 மணி நேரத்தில் 5 சீட் கவர்கள் வீதம் மாதம் 25 நாளில் 125 சீட் கவர் தயாரிக்கலாம். இதற்கு உற்பத்தி செலவு ரூ.14 ஆயிரம், கடை வாடகை ரூ.2 ஆயிரம், மின் கட்டணம் ரூ.400, உழைப்பு கூலி ரூ.6 ஆயிரம், இதர செலவுகள் ரூ.2 ஆயிரம் என ரூ.22,400 செலவாகும். ஒரு சீட் சராசரி உற்பத்தி செலவு ரூ.180 ஆகிறது.
லாபம் (மாதத்துக்கு): ஒரு சாதாரண சீட் கவர் ரூ.250, டிசைன் சீட் கவர் ரூ.350க்கு விற்கப்படுகிறது. 75 சாதாரண சீட் கவர் விற்பதன் மூலம் ரூ.18,750, 50 டிசைன் கவர் விற்பதன் மூலம் ரூ.17,500 என மொத்த வருவாய் ரூ.36,250. இதில் செலவு போக லாபம் ரூ.13,850.
சந்தை வாய்ப்பு
இரு சக்கர வாகன விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில வாகன விற்பனை நிலையங்களில் மட்டுமே சீட் தயாரித்து விற்கின்றனர். அதிலும் பிளெய்னாக உள்ள சீட்கள் மட்டும் கிடைக்கிறது. தாங்கள் விரும்பும் நிறம் மற்றும் டிசைன் உள்ள சீட் கவரை பெற வெளியில் உள்ள கடைகளையே நாடுவதால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள். சீட் கவர்கள் சேதமடைந்தால் அவற்றை மாற்றவும் பழைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இரு சக்கர வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் சீட் கவர் மொத்த விற்பனை நிலையங்களுக்கும் ரெடிமேடு சீட் கவர்களை சப்ளை செய்யலாம். நல்ல கிராக்கி உள்ளது.

……………..
No comments:
Post a Comment