ரூ.4 ஆயிரம் கோடியில் குஜராத்தில் புதிய தொழிற்சாலை : மாருதி சுசூகி
ஆமதாபாத் :
கார் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு மாருதி சுசூகி நிறுவனம் குஜராத்தில் ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய தொழிற்சாலையை
அமைக்கவுள்ளது. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி
நிறுவனம் டில்லியை அடுத்துள்ள குர்கான் மற்றும் ஹரியாணா மாநிலம் மானேசரிலும்
தொழிற்சாலை அமைத்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 15லட்சம் கார்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் இதன் எண்ணிகையை 20 லட்சமாக உயர்த்த எண்ணியுள்ளது. அதற்காக
குஜராத்தில் புதிதாக தொழிற்சாலை அமைக்க இருக்கிறது. இதற்காக அந்நிறுவனம் ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருக்கிறது.
இதற்காக சுமார் 700
ஏக்கர் நிலத்தை அம்மாநில அரசு
ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சில தினங்களுக்கு முன்னர் கையெழுத்தானது.
குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் அமையவுள்ள புதிய ஆலையின் உற்பத்தித் திறன் படிப்படியாக அதிகரிக்கப்படும். முதல் கட்டமாக இந்த ஆலை ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். புதிய ஆலைக்கான பணிகள் 2015-16-ம் ஆண்டில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

…………..
குஜராத், ராஜஸ்தானில் புதிய ஆலைகள்: ஹீரோ மோட்டோகார்ப்
புதுடில்லி:
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ. 2575 கோடி
முதலீட்டில் இரண்டு புதிய ஆலைகளை நிறுவ முடிவுசெய்துள்ளது. இதனை பற்றி நிர்வாக
இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பவன் முஞ்ஜல் பேசுகையில், 2014க்குள் இந்தப் புதிய ஆலைகள் குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்படும்.
ராஜஸ்தான் மாநிலம் நீம்ராணாவில் ரூ.400 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் ஆலையில் ஆண்டுக்கு ஏழரை லட்சம் மோட்டார்
சைக்கிள்கள் தயாரிக்கப்படும்.குஜராத்தில் அமைக்கப்படவிருக்கிற ஆலையில் ரூ. 1,100 கோடி முதலீடு செய்யப்படும். அடுத்த ஆண்டு
இறுதிக்குள் இதன் கட்டுமானப் பணிகள் முடிந்து உற்பத்தி தொடங்கிவிடும். இங்கு
ஆண்டுக்கு 12 லட்சம் பைக்குகள் உற்பத்தி செய்யத்
திட்டமிட்டிருக்கிறோம்.இந்த இரு ஆலைகளும் செயல்பாட்டுக்கு வந்ததும் ஹீரோவின் மொத்த
உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 90 லட்சம்
வாகனங்களாக இருக்கும்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் அருகே 250 ஏக்கர் பரப்பில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஒன்று தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக ரூ. 400 கோடி முதலீடு செய்யப்படுகிறது.இப்போது ஹரியாணாவின் தாருஹேரா, குர்கான் ஆகிய இடங்களிலும் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரிலும் உள்ள ஆலைகளில் ஆண்டுக்கு 70 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.இவற்றின் மேம்பாட்டுக்கு ரூ. 500 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இதர வகை முதலீடுகளுக்காக ரூ. 175 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை ரூ. 50 ஆயிரம் கோடி வருவாய் உள்ள நிறுவனமாக உருவாக்கத் திட்டமிட்டு வருகிறோம் என்றார்

………….
சோனி எக்ஸ்பீரியா பி - முன்பதிவு தொடக்கம்
சோனி
நிறுவனத்தின் புதிய மொபைல் போன் எக்ஸ்பீரியா - பி (Sony Xperia P) வாங்கிட விரும்புவோர், Flipkart இணையதளம் மூலமாக, முன்பதிவு செய்து கொள்ளலாம். சென்ற 2012 பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கில், சோனி இந்த மொபைல் போனை அறிமுகம் செய்தபோது, பலரும் இதனை ஆர்வத்துடன் பார்த்தனர். இதில்
மொபைல் பிரேவியா இஞ்சின் இணைக்கப்பட்டுள்ளது. இதன் திரை 4 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. இதன்
டிஸ்பிளே ஒயிட் மேஜிக் டிஸ்பிளே தொழில் நுட்பத்தின் மூலம் தரப்படுகிறது. வேறு எந்த
மொபைல் போனிலும் இந்த வகையான டிஸ்பிளே கிடைப்பதில்லை. சோனி நிறுவனத்தின் தனிச்
சிறப்பான திரைக்காட்சியாக இது உள்ளது. இதில் இடத்தை எடுத்துக்காட்டும் ஜியோ
டேக்கிங் வசதி உள்ள,
8 எம்பி திறன் கொண்ட, ஆட்டோ போகஸ் கேமரா தரப்பட்டுள்ளது. கூடுதலாக, வீடியோ அழைப்பிற்கென விஜிஏ கேமரா ஒன்றும்
இணைக்கப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் இயக்க வேகம் கொண்ட டூயல் கோர் ப்ராசசராகும். இதில் ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம் இயங்குகிறது. இதனை
அடுத்த பதிப்பு 4க்கு உயர்த்திக் கொள்ளலாம். 3G HSDPA 14.4 Mbps; HSUPA
5.76 Mbps,, Wi-Fi, DLNA, Bluetooth, NFC, aGPS என அனைத்து வகையான நெட்வொர்க்கிங் தொழில்
நுட்பங்களும் இதில் கிடைக்கின்றன. இதன் உள் நினைவகம் 16 ஜி.பி. ராம் நினைவகம் 1 ஜிபி. பேட்டரி 1305mAh திறன் கொண்டது. இந்த போனை இணைய தளத்தின்
மூலம் முன் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இதன் பதிவு விலை ரூ. 24,499. பதிந்தவர்களுக்கு மறு வாரத்தில் இது அனுப்பப்படும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
…………..
குறைந்த விலையில் கையடக்க கணினி : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்
கையடக்க கணினி
விற்பனையை,
பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சென்னையில் துவக்கியுள்ளது.
பி.எஸ்.என்.எல்.,
நிறுவனம் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு
இயங்கும்,
'பான்டெல்' நிறுவனத்துடன் இணைந்து,
குறைந்த விலையிலான கையடக்க கணினியை(லேப்லெட்)
அறிமுகப்படுத்தியுள்ளது. வர்த்தக ரீதியிலான, இந்த 'டேப்லெட்' கணினி விற்பனையை,
தமிழகம் மற்றும் சென்னை தொலைபேசி வட்டத்தின்
தலைமை பொது மேலாளர்கள் அஷ்ரப் கான், சுப்ரமணியன் ஆகியோர் கூட்டாக அறிமுகப்படுத்தி, முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.
பின், நவீன கையடக்க கணினிகள் குறித்து பொது மேலாளர்கள் கூறியதாவது: இரு மாதிரி, 'லேப்லெட்' கணினிகளும், மொபைல் போனை விட சற்று பெரிதாக, கையடக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதை எளிதில் எடுத்துச் செல்ல முடியும். 'லேப்-டாப்'பில் இடம் பெற்றிருக்கும் அனைத்து வசதிகளும் இதில் உள்ளன. இரு மாதிரிகளில், ஐ.எஸ்.70 ஐ.ஆர்.,ல், ஆண்ட்ராய்ட் 2.3 ஆபரேட்டிங் சிஸ்டம், 256 எம்.பி., ராம், ஒய்-பை, 3டி கேம்ஸ் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன. இதன் விலை 3,495 ரூபாய். ஐ.எஸ்.703 சி., யில், ஆண்ட்ராய்ட் 4.1 ஆபரேட்டிங் சிஸ்டம், 1 ஜி.பி., ராம், கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன; இதன் விலை 6,499 ரூபாய். கையடக்க கணினியில், இணைய வசதியைப் பெற குறைந்த கட்டணத்தில், '2ஜி, 3ஜி' திட்டங்களை பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குறைந்த கட்டணத்தில், தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையங்களில், இந்த இரு மாதிரி கணினிகள் கிடைக்கும். மேலும், இரண்டு வாரத்திற்குள் பேசும் வசதியுடன் கூடிய கையடக்க கணினி, 10 ஆயிரம் ரூபாயில் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

……………
ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி ரூ.5,000 கோடி
புதுடில்லி:சென்ற
ஏப்ரலில்,
நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 100 கோடி டாலராக (5,000 கோடி ரூபாய்) சற்று குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 1 சதவீதம் குறைவாகும் என, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது.நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின்
பங்களிப்பு,
65 சதவீதம் என்றளவில் உள்ளது.கணக்கீட்டிற்கு
எடுத்துக்கொள்ளப்பட்ட ஏப்ரல் மாதத்தில், இந்திய ஆயத்த ஆடைகளுக்கான தேவைப்பாடு, ஐரோப்பிய நாடுகளில் குறைந்துள்ளது.
மேலும், புதிய சந்தைகளாக கண்டறியப்பட்டுள்ள, ஜப்பான், ரஷ்யா மற்றும் தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து, ஆயத்த ஆடைகளுக்கு குறைந்த அளவிலேயே ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன.நடப்பு 2012-13ம் நிதியாண்டில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி வளர்ச்சி, 10-15 சதவீதம் என்றளவில் தான் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் ஏற்றுமதி, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 18 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1,360 கோடி டாலராக (68 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது.

……………….
No comments:
Post a Comment