கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: April 2012

Monday 30 April 2012

இணையதள பயன்பாடு:இந்தியா முதலிடம்

இந்தியா உலகின் இளம் இணைய மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் இணைய தளம் பயன்படுத்துவோரின் 75 சதவீதம் பேர் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்று இதற்கென்று உள்ள பிரத்தியோக ஆராய்ச்சி நிறுவனமான காம்ஸ்கோர் தெரிவித்துள்ளது. மேலும் இதைப்பற்றி காம்ஸ்கோர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக தலைவர் கியான் எம் புல்கோனி அவர்கள் தெரிவிக்கையில், 35 வயதுக்கு கீழ் பயன்படுத்துவோரின் சராசரியை ஒப்பிடுகையில் 52 சதவீதம் மற்றும் 55 சதவீதம் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் இருக்கின்றன என்று அவர் கருத்து தெரிவித்தார். இறுதியாக, இந்தியாவின் மொத்த ஆன்லைன் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு 15 முதல் 24 ஆண்டுகளுக்கு இடையிலானது என்றும் அவர் ஆய்வை வெளிட்டு கருத்து தெரிவித்தார்

தில்லி, மும்பை விமான நிலையங்களின் வருவாய் சரிவு

உலகின் மற்ற விமான நிலையங்களை ஒப்பிடும் போது இந்தியாவின் தில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களின் "வானூர்தி" வருவாய் ( ஒரு பயணிக்கு) சரிந்துள்ளது என்று ஒரு ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது. மேலும் லேஃபிஷர் மேலாண்மை ஆலோசகர்கள் 50 நாடுகளில் ஆய்வு செய்து தயார் செய்த பட்டியல் படி, ஜப்பான் நாட்டின் நரிடா விமான நிலையம் 17.86 எஸ்.டி.ஆர்ரும் தில்லி விமான நிலையத்தின் எஸ்.டி.ஆர் அதை விட குறைந்து 1.97 என்ற அளவில் காணப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளது. மும்பையை பொறுத்தவரையில் அதனுடைய வருவாய் மிகவும் சரிந்து 2.09 எஸ்.டி.ஆர் என்ற அளவில் உள்ளது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும் இதன்காரணமாக "வானூர்தி" வருவாய் இழப்பில் இரண்டாவது கடைசி இடத்தில் மும்பை விமான நிலையம் உள்ளது என்று லேஃபிஷர் மேலாண்மை ஆய்வு பட்டியல் தெரிவிக்கின்றது

Sunday 29 April 2012

டீசல் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் : இந்தியன் ஆயில் நிறுவனம்

"தமிழகத்தில், பெட்ரோல் நிலையங்களில் கடந்த இரண்டு நாட்களாக நிலவும் டீசல் தட்டுப்பாடு விரைவில் சீராகும்' என, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த இரண்டு நாட்களாக, டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், கடுமையான டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சமீபத்தில், கர்நாடகத்தில் மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு, தண்ணீர் விநியோகிப்பதற்கு, உள்ளூர் நிர்வாகம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல், 16ம் தேதி முதல் மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது. இதன் காரணமாக, கர்நாடகம், தமிழகம், கேரளம், ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களில், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் பிரச்னைகளுக்கு, உள்ளூர் நிர்வாகத்திடம், பேச்சு வார்த்தையின் மூலம், தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால், வரும் மே மாதம் முதல் தேதியில் இருந்து, மீண்டும் மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உற்பத்தியைத் துவங்கும். இந்நிலையில், தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாட்டை நீக்க, இந்தியன் ஆயில் நிறுவனம், சிங்கப்பூரில் இருந்து டீசலை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இது, சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் நிலவும் டீசல் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பிளாட்பார கட்டண உயர்வு ஒன்றாம் தேதி முதல் அமல்


 ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிளாட்பார கட்டண உயர்வு, வரும் மே ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, வரும் மே ஒன்றாம் தேதி முதல் பிளாட்பார கட்டணம், மூன்று ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு, தென்னக ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Saturday 28 April 2012

சாம்சங் மொபைலின் விற்பனை இலக்கு 380 மில்லியன்


மொபைல் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான சாம்சங் மொபைல்  2012 ல் சுமார் 380 மில்லியன் மொபைல்கள் விற்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இதைப்பற்றி சாம்சங் மொபைலின் தலைமை நிர்வாகி (மொபைல் கம்யூனிகேஷன்ஸ் வர்த்தகம் ) ஜே.கே. ஷைன் அவர்கள் கூறுகையில், வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் பிசி சந்தையில் சக போட்டியாளர்களான ஆப்பிள் மற்றும் நோக்கியா டேப்லெட்டின் போட்டியை சமாளிக்கும் விதத்திலும் மற்றும் எங்கள் மொபைல்களின்  விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்திலும் இந்த இலக்கை வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் சாம்சங் மொபைலின் ஸ்மார்ட்போன்கள் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இந்திய கடற்படை 1.5 பில்லியன் டாலருக்கு விமானம் வாங்க ஒப்பந்தம்:


இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பாக கடற்படையின் கரையோர கண்காணிப்பு திறன்களை அதிகரிக்க $ 1.5 பில்லியன் அளவிற்கு உளவு விமானங்கள் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது என்று அமைச்சகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதைப்பற்றி இந்திய அமைச்சகம் தெரிவிக்கையில், இந்த திட்டத்திற்காக அமெரிக்க லாக்ஹீட் மார்டின், ஸ்வீடிஷ் சாப், பிரஞ்சு தாஸ்சால்ட் , பிரேசிலின் எம்ப்ரேயர் மற்றும் ஐரோப்பிய ஈஏடிஎஸ் உட்பட பல உலக விமான நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்களை இந்திய பாதுக்காப்பு அமைச்சகம் வாங்கியுள்ளது என்றும் இறுதியாக $ 3.1 பில்லியன் விலைகளுக்கு வாங்கவும் அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.வி.பி அதன் கிளைகளை விரிவாக்கம் செய்கிறது


தமிழ்நாட்டின் முன்னணி தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கி (கே.வி.பி) நாடு முழுவதும் அதன் கிளைகளை விரிவாக்கம் செய்ய  முடிவு செய்துள்ளது என்று அந்த வங்கியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதைப்பற்றி கே.வி.பியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே வெங்கட்ராமன் அவர்கள் கூறுகையில், இந்த நிதி ஆண்டில் வங்கியின் கிளைகளை 450 என்ற அளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வெகு விரைவில் அதன் கிளைகளை திறக்க இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் கே.வி.பி ஏற்கனவே 2011-12 ஆம் ஆண்டில் பாட்னா மற்றும் பீகார் உட்பட 72  இடங்களில் கிளைகளை திறந்து உள்ளது என்றும் அடுத்த நிதி ஆண்டிற்குள் மேலும் 100 கிளைகளை சேர்க்க இலக்கு வைத்திருப்பதாக அவர் கூறினார்.