கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: தில்லி, மும்பை விமான நிலையங்களின் வருவாய் சரிவு

Monday 30 April 2012

தில்லி, மும்பை விமான நிலையங்களின் வருவாய் சரிவு

உலகின் மற்ற விமான நிலையங்களை ஒப்பிடும் போது இந்தியாவின் தில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களின் "வானூர்தி" வருவாய் ( ஒரு பயணிக்கு) சரிந்துள்ளது என்று ஒரு ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது. மேலும் லேஃபிஷர் மேலாண்மை ஆலோசகர்கள் 50 நாடுகளில் ஆய்வு செய்து தயார் செய்த பட்டியல் படி, ஜப்பான் நாட்டின் நரிடா விமான நிலையம் 17.86 எஸ்.டி.ஆர்ரும் தில்லி விமான நிலையத்தின் எஸ்.டி.ஆர் அதை விட குறைந்து 1.97 என்ற அளவில் காணப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளது. மும்பையை பொறுத்தவரையில் அதனுடைய வருவாய் மிகவும் சரிந்து 2.09 எஸ்.டி.ஆர் என்ற அளவில் உள்ளது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும் இதன்காரணமாக "வானூர்தி" வருவாய் இழப்பில் இரண்டாவது கடைசி இடத்தில் மும்பை விமான நிலையம் உள்ளது என்று லேஃபிஷர் மேலாண்மை ஆய்வு பட்டியல் தெரிவிக்கின்றது

No comments:

Post a Comment