கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: டீசல் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் : இந்தியன் ஆயில் நிறுவனம்

Sunday 29 April 2012

டீசல் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் : இந்தியன் ஆயில் நிறுவனம்

"தமிழகத்தில், பெட்ரோல் நிலையங்களில் கடந்த இரண்டு நாட்களாக நிலவும் டீசல் தட்டுப்பாடு விரைவில் சீராகும்' என, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த இரண்டு நாட்களாக, டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், கடுமையான டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சமீபத்தில், கர்நாடகத்தில் மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு, தண்ணீர் விநியோகிப்பதற்கு, உள்ளூர் நிர்வாகம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல், 16ம் தேதி முதல் மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது. இதன் காரணமாக, கர்நாடகம், தமிழகம், கேரளம், ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களில், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் பிரச்னைகளுக்கு, உள்ளூர் நிர்வாகத்திடம், பேச்சு வார்த்தையின் மூலம், தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால், வரும் மே மாதம் முதல் தேதியில் இருந்து, மீண்டும் மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உற்பத்தியைத் துவங்கும். இந்நிலையில், தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாட்டை நீக்க, இந்தியன் ஆயில் நிறுவனம், சிங்கப்பூரில் இருந்து டீசலை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இது, சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் நிலவும் டீசல் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment