மொபைல் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான சாம்சங் மொபைல் 2012 ல் சுமார் 380 மில்லியன் மொபைல்கள் விற்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இதைப்பற்றி சாம்சங் மொபைலின் தலைமை நிர்வாகி (மொபைல் கம்யூனிகேஷன்ஸ் வர்த்தகம் ) ஜே.கே. ஷைன் அவர்கள் கூறுகையில், வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் பிசி சந்தையில் சக போட்டியாளர்களான ஆப்பிள் மற்றும் நோக்கியா டேப்லெட்டின் போட்டியை சமாளிக்கும் விதத்திலும் மற்றும் எங்கள் மொபைல்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்திலும் இந்த இலக்கை வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் சாம்சங் மொபைலின் ஸ்மார்ட்போன்கள் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment