கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: செய்திகள்

Thursday 31 May 2012

செய்திகள்


கும்மிடிபூண்டியில் ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கும்மிடிபூண்டி: கும்மிடிபூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள, எஸ்.ஏ.சி ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இயந்திரங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையான எஸ்.ஏ.சி நிறுவனத்தில் பணிநேரத்தை 12 மணி நேரத்திலிருந்து, 8 மணி நேரமாக குறைக்க வலியுறுத்தியும், 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களைபணிநிரந்தரம் செய்யக் கோரியும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
..........

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு : பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

திருப்பூர்: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. ஒரு டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு `47 ஆக இருந்தது. கடந்த வாரம் இது வரை இல்லாத அளவு `56ஐ தொட்டது. இதனால் இறக்குமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர். அதேசமயம், இது ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை அளிப்பதாக உள்ளது. குறிப்பாக திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறையினருக்கு இது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

திருப்பூரில் இருந்து 90 சதவீத பின்னலாடைகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. டாலர் மதிப்பின் அடிப்படையில் தான் ஏற்றுமதி ஆர்டர்களை பையர்கள் வழங்கி வருகின்றனர். ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்கள் பழைய டாலர் மதிப்பில் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்திய ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பு உயர்ந்து வருவது ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாய ஆலை மூடல், மின்தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், சரிவில் இருந்த பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் நம்புகின்றனர்.
....................

22 நாளாக பைலட்டுகள் ஸ்டிரைக்ஏர் இந்தியா நஷ்டம் ரூ.310 கோடியானது


மும்பை 30: ஏர் இந்தியா நிறுவனத்தின் பைலட்டுகள் ஸ்டிரைக் 22வது நாளாக நீடித்தது. இதனால், அந்த நிறுவனத்துக்கு ரூ.310 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்கும் ஏர் இந்தியா பைலட்டுகள் கடந்த 8ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வெளிநாடுகளுக்கான ஏர்இந்தியா விமான சேவை கடுமையாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பைலட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை.

இந்த நிலையில், 22வது நாளாக நேற்றும் பைலட்டுகள் ஸ்டிரைக் நடந்தது. தொடர்ந்து நடக்கும் ஸ்டிரைக் காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.310 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் மும்பையில்  தெரிவித்தார்.
................

மிகச் சிறிய வீடியோஸ்கோப்பை அறிமுகப்படுத்தும் ஒலிம்பஸ் நிறுவனம்


மின்னணு பொருட்களின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஒலிம்பஸ் உலகில் காணப்படும் வீடியோஸ்கோப்களில் மிகவும் சிறிதான வீடியோஸ்கோப்பைத் தயாரித்துள்ளது. வீறிலிணிஙீ ஜிஙீ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியேஸ்கோப் வெறும் 2.4 மில்லிமீட்டர்கள் விட்டம் கொண்டதாக அமைக்கப் பட்டுள்ளதுடன், இதே அளவில் பைர்ஸ்கோப் எனும் சாதனம் மட்டுமே உள்ளதாக ஒலிம்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மிக விரைவில் அந்நிறுவனம் இந்த வீடியோஸ்கோப்பை அறிமுகப்படுத்த இருக்கிறது.
.....................

மணல், சூரிய ஒளியை பயன்படுத்தி நவீன பிரிண்டர்கள்


கணினித் தொழில்நுட்பத்தில் பிரிண்டர்களின் பயன்பாடானது அதிகளவில் காணப்படுகின்றன. இதன் வரலாற்றில் பல்வேறு தொழில்நுட்பங்களில் அமைந்த பல்வேறு வகையான இருபரிமாணப் பிரிண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் முப்பரிமாண பிரிண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் முப்பரிமாணத் தோற்றம் கொண்ட வெளியீடுகளை பெற முடியும். அதிலும் மணலை மூலப்பொருளாகவும், சூரிய ஒளியை மின் முதலாகவும் கொண்ட பிரிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது பரிசோதனையில் இருக்கும் இந்த பிரிண்டர்கள் விரைவில் சந்தைக்கு வரவுள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
...............

முழுமையான இணையத்தள வசதிக்கு ஏற்ற மொபைல் பிரவுசர் அறிமுகம்


பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு. ஸ்கைபயர் கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது. ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.

தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை. நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும். ஸ்கைபயரின் இணையதளம். உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து m.skyfire.com இந்த முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.
...............

குழந்தைகளுக்கான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் அறிமுகம்

சிறிய குழந்தைகள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் அறிமுகமாகி உள்ளது. முற்றிலும் வண்ணமயமாக்கப்பட்ட குழந்தைகள் விளையாடும் பிளே ஸ்டேசன் போல் இது அமைந்துள்ளது. இந்த டெஸ்க்டாப் கம்யூட்டருக்கு பிரிமியர் கிட்ஸ் சைபர்நெட் ஸ்டேசன் என்று பெயர் வைத்துள்ளனர். தண்ணீர் கீபோர்டில் பட்டால் கூட எந்த பழுதும் ஏற்படாது என்பதில் இருந்து மானிட்டரை தொட்டு இன்புட் கொடுக்கலாம் என்பதுவரை அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் உள்ளது.

இண்டெர்நெட்டில் ஆபாச இணையதளங்களை தடுக்கும் மென்பொருளும் எந்த வைரஸும் கம்யூட்டரை தாக்காத வண்ணம் உள்ள மென்பொருள்களையும் வடிவமைத்துள்ளனர். இதனுடன் குழந்தைகள் அறிவை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான பேக்கேஸும் சேர்த்தே கொடுக்கின்றனர் இதில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த டொட்லர் என்று முதல் பேக்கேஸ். இரண்டாவது 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த கைண்டர்கெர்டன் என்ற பேக்கேஸ். மூன்றாவதாக 11 முதல் 15  வயது வரை உள்ள தொடக்க மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான  பேக்கேஸும் உள்ளது. இத்தனை வசதிகளும் உள்ள இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் விலை கொஞ்சம் அதிகம் தான் இதன் விலை 1999 அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
..............

வீடியோ கேம் பிரியர்களுக்கான புதிய டேப்லட் அறிமுகம்


வீடியோ கேம்களுக்கான பொருட்களை தயாரிக்கும் ரேசர் நிறுவனமானது வீடியோ கேம் பிரியர்களை நோக்கமாகக் கொண்டு பியோனா எனப்படும் புதிய டேப்லட்டுகளை உருவாக்கியுள்ளது. டேப்லெட்டின் இரண்டு பக்கவாட்டிலும் இயக்குபிடிகள் காணப்படுவதுடன் தேவைக்கேற்றவாறு டச்ஸ்கிரீன் வசதியையும் பயன்படுத்த முடியும்.

அத்துடன் வின்டோஸ் 8 இயங்கு தளத்தையும் பயன்படுத்தக்கூடியதாக இருக்குமாம். இதில் இண்டர் கோர்ஸ் ஐ7 ப்ராசசர்ஸ் இணைக்கப்பட்டிருப்பதனால் மிகவேகமாக இயங்குவதுடன் ஆங்கிரி பேர்ட்ஸ் போன்ற உயர் தரமுடைய கணினி விளையாட்டுக்களையும் பயன்படுத்த முடியும். இவற்றை 2012ல் நான்காவது காலாண்டுப்பகுதியில் நடக்க இருக்கும் நுகர்வோர் எலக்ட்ரானிக்கல் கண்காட்சியில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கின்றது. இதன் விலை 1000 அமெரிக்க டாலர்களிலும் குறைவாகவே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
..................

ஃபியட் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய செடான் கார்


சீன மார்க்கெட்டுக்காக புத்தம் புதிய செடான் காரை ஃபியட் தயாரித்துள்ளது. வியாஜியோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் தற்போது பெய்ஜிங்கில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜிஏசி ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் இணைந்து இந்த காரை ஃபியட் வடிவமைத்துள்ளது. டி- செக்மென்ட்டில் நிலை நிறுத்தப்பட இருக்கும் இந்த காரின் வடிவமைப்பு நிச்சயம் சீனர்களை அசத்தும் வகையில் இருக்கிறது. 1.4 லிட்டர் டி-ஜெட் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினுடன் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது.

ஆனால், 2 விதமான ஆற்றல் வேறுபாடுகளை கொண்ட 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களாக விற்பனைக்கு கிடைக்கும். இந்த காரின் முக்கிய அம்சங்களாக இதன் டச் ஸ்கிரீனை கூறலாம். இந்த காரில் செயற்கைகோள் இணைப்புடன் கூடிய அகன்ற 8.4 இஞ்ச் டச் ஸ்கிரீனை ஃபியட் பொருத்தியுள்ளது. இதேபோன்று, டேஷ்போர்டு வடிவமைப்பும் மிகவும் அசத்தலாக இருக்கிறது. இந்த கார் இந்தியா வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஏனெனில், இந்தியாவில் டி-செக்மென்ட்டில் எந்த கார் மாடலையும் ஃபியட் வைத்திருக்கவில்லை. ஆனால், இதுகுறித்து இதுவரை ஃபியட் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
....................

ஸ்லைடர் மாடலில் புதிய எல்ஜி மொபைல்

ஸ்லைடர் வடிவமைப்பில் சி-221 என்ற புதிய மொபைலை உருவாக்கி உள்ளது எல்ஜி நிறுவனம். மிருதுவான நியூமரிக்கல் கீப்பேட் வசதியினை கொண்ட இந்த மொபைல் பட்ஜெட் விலை கொண்டது. எல்சிடி தொழில் நுட்பம் கொண்ட இந்த மொபைல் எம்பி-3 மியூசிக் ப்ளேயர் வசதிக்கும் சப்போர்ட் செய்யும். 3 மணி நேரம் வரை டாக் டைம் மற்றும் 300 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும் இந்த மொபைல், சிறந்த தொழில் நுட்பத்தினை எளிமையான வகையில் வழங்கும். மேலும், தகவல்கள் பரிமாற்றத்திற்கு இந்த மொபைலில் புளூடூத் வசதியும் உள்ளது. கவர்ச்சிகரமாக வடிவமைப்பை பெற்று இருக்கும் இந்த சி-221 மொபைல் கவர்ச்சிகரமான விலையையும் வழங்கும். கண் கவரும் கறுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த மொபைலின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. ஆனால் பட்ஜெட் விலையில் வெளியாக இருக்கும் இந்த மொபைலின் தொழில் நுட்ப விவரங்களை கூடிய விரைவில் பெற முடியும்.
..................

அசத்தல் விலையில் அறிமுகமான எர்டிகா மாருதி


ரூ.5.89 லட்சம் என்ற  ஆரம்ப விலையில் 7 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட எர்டிகாவை மாருதி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மும்பையில் நடந்த விழாவில் மாருதி தலைவர் சின்சோ நகனிஷி எர்டிகாவை முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார். இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் காராகஎர்டிகா இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், ரிட்ஸ் காரின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள எர்டிகா மூலம் எம்பிவி கார் செக்மென்ட்டில் மாருதி அடியெடுத்து வைத்துள்ளது. டேஷ்போர்டு மற்றும் உள்ளலங்காரம் அனைத்தும் ஸ்விப்ட் காரிலிருந்து பெற்றுள்ளது எர்டிகா. ஆனாலும், பிரிமியம் லுக்குடன் இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வந்துள்ள எர்டிகா தலா 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். 1372 சிசி கொண்ட 1.4 லிட்டர் கே-14 எஞ்சின் 95 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். எஸ்எக்ஸ்-4 காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் கொண்ட மாடலில் எர்டிகா கிடைக்கும்.
........................

சக்கர நாற்காலியை ஈடுசெய்யும் புதிய சாதனம் கண்டுபிடிப்பு


சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் அளவிற்கு உடல் ஊனமுற்றவர்களுக்கென்று டெக் ரொபாட்டிக் மொபலைசேஷன் டிவைஸ் என்ற புதிய வகை சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்த நிலையில் தான் பயனம் செய்ய முடியும். ஆனால், இந்த அரிய வகை சாதனத்தில் சக்கர நாற்காலியைப் போன்று அமர்ந்த நிலையில் இல்லாமல் நின்று பயணிக்கக்கூடிய வசதியைத் தருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சிறப்பு சாதனம் ஊனமுற்றவர்களுக்கு உடல் அளவில் வசதியாக இருப்பது போன்று மனதளவிலும் மகிழ்ச்சி அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
..................

மூக்கு கண்ணாடியில் வீடியோ கேமரா


முற்காலங்களில் கண்பார்வையில் குறைபாடு உடையர்கள்  தான் கண்ணாடி அதை ஈடு செய்வதற்காக மூக்குக்கண்ணாடிகளை அணிந்தார்கள். காலப்போக்கில் நாகரிகம் என்று கூறிக்கொண்டு அழகுக்காகவும் அணிந்தார்கள். ஆனால் தொழில்நுட்பவியலாளர்கள் ஒருபடி மேலே சென்று இந்த மூக்குக்கண்ணாடிகளையும் மின் சாதனமாக மாற்றிவிட்டார்கள். இதன் அடிப்படையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கண்ணாடியை அணிந்தவாறு பார்க்கும் காட்சிகள், பொருட்கள் என்பனவற்றை அதில் பொருத்தப்பட்டுள்ள உயர் திறன்கொண்ட வீடியோ கேமரா மூலம் 1080 பிக்சல்களில் பதிவு செய்ய முடியும்.

மேலும், அதில் பொருத்தப்பட்டுள்ள 8 மெகாபிக்ஸல் கொண்ட கேமரா மூலம் புகைப்படங்களை எடுக்கக்கூடியதாக காணப்படுவதுடன் 44.1 kHz அதிர்வெண்ணுடன் இயங்கக்கூடிய மைக்ரோபோனும் காணப்படுகின்றது. இன்மூலம் 720 பிக்சல் அல்லது 1080 பிக்சலில் பதிவு செய்யப்படும் வீடியோவானது செக்கன்டுக்கு 30 பிரேம்கள் என்ற வேகத்தில் பதிவாகுவதுடன் 720 பிக்சலில் பதிவு செய்யும் போது செக்கன்டுக்கு 60 பிரேம்கள் என்று மாற்றக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.
................

பொறியியல் கல்லூரியில் 260 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

வேளச்சேரி: பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு சிடிஎஸ், எச்சிஎல் உட்பட 35 நிறுவனங்கள் சார்பில், வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நடந்தது.
இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுரேஷ் தலைமை தாங்கினார். கல்லூரி பணி நியமன அதிகாரி நிவாஸ் குமார் வரவேற்றார். எச்சிஎல் அதிகாரிகள் வம்சி கிருஷ்ணா, விக்னேஷ் ஆகியோர், 260 மாணவ, மாணவிகளுக்கு பணிநியமன ஆணையை வழங்கினர். நிர்வாக அதிகாரி காங்கேயன், துறைத்தலைவர்கள் பங்கேற்றனர்.
............................

கடையை உடைத்து மொபைல் போன் கொள்ளை கரையான்சாவடியில் அடிக்கடி திருட்டு

பூந்தமல்லி:கரையான்சாவடி பஸ் ஸ்டாப் அருகே கடை பூட்டை உடைத்து செல்போன்கள், பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த பகுதியில் திருட்டு சகஜமாகி வருகிறது. ஆனால் புகார் பதிவு செய்ய போலீசார் சுணக்கம் காட்டி வருகின்றனர்.
பூந்தமல்லி, கரையான்சாவடியைச் சேர்ந்தவர் மனோஜ் (32). கரையான்சாவடி பஸ்ஸ்டாப் அருகே செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிச் சென்றார்.
நேற்று காலை கடையை திறக்க வந்தார். கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோதுரூ 80 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் ரூ 30 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளைபோயிருந்தது.
புகாரின்படி பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன் கடை யில் கொள்ளையடித்து தப்பிய நபர்களை தேடுகின்றனர். செல்போன் கடையை ஒட்டியுள்ள டீக்கடை, மெடிக்கல், சுவீட் கடை யில் கடந்த 3 நாளுக்கு முன் பூட்டு உடைத்து ரூ 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடக்கும் கொள்ளை சம்பவத்தால் வியாபாரிகள் பீதியில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பூந்தமல்லி, கரையான் சாவடி ஆகிய பகுதிகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. போலீசார் பெரும்பாலான புகார்கள் மீது வழக்கு பதிவு செய்வதை தவிர்த்து வருகின்றனர். அதனால்தான் இப்பகுதியில் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரித்துவருகிறது.
போலீசார் வழக்கு பதிவு செய்வதை தவிர்ப்பதைப் பார்த்தால் அவர்கள் மீதே சந்தேகம் ஏற்படு கிறது. பதிவு செய்யப்பட்ட ஒரு சில வழக்குகளில் கூட குற்றவாளி களை இன்னும் கைது செய்யவில்லைஎன்கின்றனர்.
....................

1 comment: