கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: Current News

Tuesday 29 May 2012

Current News

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 : விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

ஜுலை மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ள குரூப் 4 தேர்வுக்காக விண்ணப்பிக்கும் தேதி ஜுன் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுவரை 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், தொடர்ந்து பலரும் விண்ணப்பித்து வருவதால் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசுத் துறையில் சுமார் 10,718 காலிப் பணியிடங்களுக்கு இந்த குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது.
.....................

ராஜபாளையத்தில் வேலைவாய்ப்பு முகாம்

ராஜபாளையம் விஜய்குரு டிரஸ்ட், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புத் துறை ஆகியன இணைந்து, மே 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.
 இது குறித்து, ராஜபாளையம் விஜய் குரு டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எம்.ஜி.சிவகுமார் தெரிவித்ததாவது:
 ராஜபாளையம் சுப்பராஜா மடம் தெருவில் உள்ள விஜய்குரு டிரஸ்ட் அலுவலகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை, தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. விஜய்குரு டிரஸ்ட், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புத் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியனஇணைந்து நடத்தும் இந்த முகாமில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மு. பாலாஜி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முகாமைத் துவக்கிவைக்கிறார்.
 முகாமில், ஐ.டி. துறை, ஜவுளித் துறை, உணவுத் துறை, பொறியியல் துறை தொடர்பான நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
 எனவே, வேலை தேடும் படித்த இளைஞர்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும். இதில், பங்கேற்பவர்கள் உரிய கல்வித் தகுதிக்கான அத்தாட்சியுடன் வரவேண்டும். மேலும், அன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி முகாமும் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.
......................

16 ஆயிரத்து 56 சத்துணவு அமைப்பாளர், சமையலர் காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் பணியிடங்களில் காலியாக உள்ள 16 ஆயிரத்து 56 இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 விண்ணப்பங்களை ஜூன் 5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர், தாழ்த்தப்பட்டோருக்கான வயது வரம்பு 21-லிருந்து 40 வயதுக்குள்ளும், பழங்குடியினருக்கு 18 வயது முதல் 40 வயது வரையிலும், விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
 சமையலர் பணிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும். பழங்குடியினராக இருந்தால் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும். பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 வயது பூர்த்தி அடைந்து 40 வயதுக்கு மிகாதவராக இருத்தல் அவசியம். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
 சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோரில் பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
 சமையலர் மற்றும் சமையல் உதவியாளருக்கான நியமன அலுவலர்களாக மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரும் (சத்துணவு), சென்னை மாநகராட்சியில் சமூக நல இயக்குநரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை அந்தந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாநகராட்சி எல்லையில் வசிப்பவராக இருந்தால் ஆணையரிடம் அளிக்க வேண்டும். 

No comments:

Post a Comment