கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: Current News

Sunday 20 May 2012

Current News


ரூ.50 கோடி கொடுத்து அக்ஷய் குமாரை விளம்பர தூதராக்கிய ஹோண்டா!

விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்வதற்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு ரூ.50 கோடியை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா இந்திய இருசக்கர வாகன மார்க்கெட்டில் அதிவேக வளர்ச்சியை பெற்று வருகிறது. டிவிஎஸ் மோட்டார்சை பின்னுக்குத் தள்ளி தற்போது 3ம் இடத்துக்கு முன்னேறியுள்ள ஹோண்டா 2ம் இடத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோவுக்கும் நெருக்கடி ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், மார்க்கெட் பங்களிப்பை அதிகரிக்கும் விதமாக ட்ரீம் யுகா என்ற 110 சிசி திறன் கொண்ட புதிய மோட்டார்சைக்கிளை நேற்று அறிமுகம் செய்துள்ளது. மேலும், தனது தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் விதமாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை விளம்பர தூதராக நியமித்துள்ளது.

மேலும், விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் நடிகர் அக்ஷய் குமாருக்கு ரூ.50 கோடி கொடுத்து ஹோண்டா ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு ரூ.10 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு இருசக்கர வாகன நிறுவனங்கள் சினிமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களை விளம்பர தூதர்களாக நியமித்துள்ளன. ஆனால், தற்போதுதான் ஹோண்டா தனது முதல் விளம்பர தூதராக அக்ஷய் குமாரை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்.
புதிதாக ரூ.300 கோடியை முதலீடு செய்யும் ஸ்கோடா

உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதற்காககவும் புதிதாக ரூ.300கோடியை ஸ்கோடா ஆட்டோ முதலீடு செய்ய இருக்கிறது.

செக் குடியரசை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகனின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் வோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனங்கள் தனித்தனி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அடுத்த கட்ட விரிவாக்கப் பணிகளை ஸ்கோடா ஆட்டோ மேற்கொள்ள உள்ளது. இந்தியாவில் தனது மாடல்கள் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தவும் முடிவு செய்துள்ளது.

இதற்காக, அவுரங்காபாத்தில் உள்ள ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிப்பது மற்றும் புதிய மாடல்களை பிரபலப்படுத்துவது உள்ளிட்டவைகளுக்காக புதிதாக ரூ.300 கோடியை அந்த நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது.

மேலும், கார்களுக்கு இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்களின் அளவை குறைத்து உள்நாட்டிலேயே பெறவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம், கார்களுக்கான உற்பத்தி செலவை வெகுவாக குறைக்க முடியும் என்பதால், போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் விலையில் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
..................................................
ஸ்விப்ட் டீசல் எஞ்சினுக்காக ரூ.2000 கோடி மாருதி முதலீடு


ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக, டீசல் மாடல்களுக்கு தேவை கணிசமாக உள்ளது. ஆனால், தேவை இருக்கும் அளவுக்கு தற்போது மாருதியிடம் டீசல் எஞ்சின் உற்பத்தி இல்லை.

இதனால், ஸ்விப்ட், டிசையர் கார்களின் டீசல் மாடல்களுக்கு 6 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் நீள்கிறது. இந்த நிலையில், வெயிட்டிங் பீரியடை குறைக்கும் விதமாக ஃபியட்டிடமிருந்து ஆண்டுக்கு ஒரு லட்சம் எஞ்சின்களை பெறுவதற்கு மாருதி ஒப்பந்தம் போட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், புதிய டீசல் எஞ்சின் ஆலையை குர்கானில் மாருதி அமைக்க உள்ளது. ரூ.2000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட இருக்கும் இந்த ஆலையில் ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களுக்கான டீசல் எஞ்சின் தயாரிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஆலையில் எஞ்சின் உற்பத்தி துவங்கப்பட்டவுடன் ஸ்விப்ட், டிசையர் கார்களின் வெயிட்டிங் பீரியட் கணிசமாக குறையும். மாருதி போன்றே கார்களுக்கான டீசல் எஞ்சின் உற்பத்தி ஆலையை கட்டுவதற்கு பல முன்னணி நிறுவனங்கள் பெரும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்..
சென்னை ஆலையில் கார் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் ரெனோ-நிசான்!

சென்னை ஆலையில் கார் உற்பத்தியை இரு மடங்கு உயர்த்த ரினால்ட்- நிசான் கூட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜப்பானை சேர்ந்த நிசான் மற்றும் பிரான்சை சேர்ந்த ரினால்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கட்டியுள்ள கார் ஆலை சென்னை அருகே ஒரகடத்தில் செயல்பட்டு வருகிறது. ரூ.4,500 கோடியில் கட்டப்பட்ட இந்த ஆலையில் தற்போது இரு நிறுவனங்களும் தங்களது கார் மாடல்களை உற்பத்தி செய்து வருகின்றன.

இந்த ஆலையில் தற்போது ஆண்டுக்கு 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், நீண்ட கால வர்த்தக திட்டத்துடன் இந்திய மார்க்கெட்டில் இறங்கியுள்ள இந்த நிறுவனங்களும் அடுத்தடுத்து பல புதிய மாடல்களை களமிறக்க திட்டமிட்டுள்ளன.

மேலும், இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கும் கார்களை ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளன. இதனால், தற்போது ஆலையின் கார் உற்பத்தி திறனை இரு மடங்கு உயர்த்த இந்த கூட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வரும் 2015-16ம் ஆண்டுக்குள் கார் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 8 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளன. இதனால், சென்னை ஆலையை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால், புதிய வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்.
ஏப்ரலில் மாருதி கார் விற்பனை வளர்ச்சி: ஸ்விப்ட், டிசையர் கைகொடுத்தன

ஏப்ரலில் மாருதியின் கார் விற்பனை சிறிய அளவில் முன்னேற்றம் கண்டது. அந்த நிறுவனத்தின் புதிய ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்கள் கைகொடுத்ததால் அந்த நிறுவனத்தின் விற்பனை ஓரளவு முன்னேற்றம் கண்டது.

ஆல்ட்டோ உள்ளிட்ட சிறிய கார்களின் விற்பனை அந்த நிறுவனத்துக்கு ஏமாற்றத்தை அளித்தன. சிறிய கார்களால் வலுவான மார்க்கெட்டை பெற்ற மாருதிக்கு, கடந்த மாதம் சிறிய கார்களின் விற்பனை 26.4 சதவீதம் வீழ்ச்சி கண்டது.

கடந்த மாதம் 15,510 டிசையர் கார்களை மாருதி விற்பனை செய்தது. டிசையர் விற்பனை 31.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதேபோன்று, ஸ்விப்ட் காரின் விற்பனையும் 20,000 என்ற எண்ணிக்கையை தொட்டு அந்த நிறுவனத்தின் விற்பனை வீழ்ச்சி பெறாமல் தடுத்து நிறுத்த உதவியது.

மொத்தத்தில் கடந்த மாதம் மாருதி நிறுவனம் 1,00,415 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் விற்பனையை ஒப்பிடும்போது 3.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.

அடுத்தடுத்து பல புதிய மாடல்களை அறிமுகம் செய்தும் மாருதியின் கார் விற்பனை எதிர்பார்த்த அளவு வளர்ச்சி காணவில்லை. இதற்கு சிறிய கார்களின் விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சியே காரணம்.

மேலும், டீசல் கார்களுக்கு மவுசு அதிகரித்து வருவதாலும் சிறிய கார்களில் பெட்ரோல் மாடலை மட்டுமே வைத்திருக்கும் மாருதிக்கு எதிர்பார்த்த விற்பனையை பெற்று தரவில்லை.
.................................
அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகிறது பஜாஜ் குட்டி


அடுத்த ஆண்டு துவக்கத்தில் தனது முதல் 4 சக்கர வாகனத்தை வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொணடு வர திட்டமிட்டுள்ளது பஜாஜ் ஆட்டோ.

இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது புதிய 4 சக்கர வாகனத்தை தயாரித்துள்ளது. ஆட்டோரிக்ஷாவுக்கு மாற்றாக விறபனைக்கு விட திட்டமிடப்பட்டுள்ள இந்த குட்டி பயணிகள் வாகனம் அறிமுகம் குறித்து பல்வேறு யூகத் தகவல்கள் உலவி வந்தன.

இதற்கு தற்போது பஜாஜ் ஆட்டோ முற்றுப் புள்ளி வைத்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய குட்டி பயணிகள் வாகனத்தை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ மூத்த துணைத் தலைவர் எஸ்.ரவிக்குமார் கூறுகையில்," நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் எங்களது 4 சக்கர வாகனத்தை வணிக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

பஜாஜ் வடிவமைத்துள்ள புதிய 4 சக்கர பயணிகள் வாகனம் லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தற்போதைய ஆட்டோ ரிக்ஷாவுக்கு சரியான மாற்று வாகனமாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.
....................................
பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு உறுதுணையாகும் ஸ்மார்ட்போன்கள்!


ஐபோன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்றும் அதனால் பல மருத்துவர்கள், பார்வை குறைபாடு கொண்ட நோயாளிகளுக்கு ஸ்மார்ட்போன்களைப் பரிந்துரைக்கின்றனர் என்றும்  சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
அதாவது ஸ்மார்ட்போன்களில் உள்ள எழுத்துக்களின் அளவை 56 புள்ளி அளவிற்கு பெரிதாக்க முடியும். அதனால் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பெரிய எழுத்துக்களில் வரும் இமெயில்கள் மற்றும் மற்ற எஸ்எம்எஸ்களை வாசிக்க முடியும். அதுபோல் டிஸ்ப்ளேயின் வெளிச்சத்தை அதிகரிக்கவும் முடியும். அதன் மூலம் பார்வை மங்கலானவர்கள் வெளிச்சம் அதிகான டிஸ்ப்ளேயில் உள்ளவற்றைப் பார்க்க முடியும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த லொயோலா யுனிவர்சிட்டி சிக்காகோ ஸ்ட்ரிட்ஜ் ஸ்கூல் ஆப் மெடிசினைச் சேர்ந்த வால்டர் எம். ஜெய் கூறுகிறார்.
இதற்கான ஆய்வில் பார்வை குறைந்த 46 இளைஞர்கள் பங்கு கொண்டனர். இவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவர்களை அணுகி இருக்கின்றனர் என்றும் அவர்கள் அனைவருமே ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துமாறு அவர்களின் மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர் என்று தெரிய வந்திருக்கிறது.
அதனால் இப்போது அதிகமான பார்வை குறைபாடு உள்ளவர்கள் தங்களது மருத்துவர்களை அணுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. மேலும் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் வீட்டுக்குள்ளே முடங்கி இருக்காமல் வெளியுலகிற்கு சாதிக்க வரவேண்டும் என்று ஜெய் கூறுகிறார். அவர்களில் வாழ்க்கைத் தரத்தை ஸ்மார்ட்போன்கள் உயர்த்தும் என்று அவர் கூறுகிறார்.
மேலும் ஆய்வுக்கு வந்திருந்த 46 பார்வை குறைபாடு உள்ளவர்களில் 11 பேர் (24 சதவீதம்) ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். அவர்கள் எல்லாம் 36 வயதிற்குட்பட்டவர்கள். 30 பேர் (65 சதவீதம்) சாதாரண செல்போன்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அனைவரும் 67 வயதிற்குட்பட்டவர்கள். இறுதியாக 5 பேர் (11 சதவீதம்) செல்போன்களைப் பயன்படுத்துவதில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.
....................................
3ஜி சேவையில் புதிய நோக்கியா மொபைல்!


தொடுதிரை வசதி கொண்ட புதிய மொபைலை உருவாக்கி உள்ளது நோக்கியா நிறுவனம். நோக்கியா-311 என்ற இந்த மொபைல் முழு தொடுதிரை வசதியில் அசத்தும். கேரா வசதி சிறப்பாக உள்ளதா என்று தேடுபவர்களுக்கு, இந்த மொபைலின் கேமரா பொருத்தமான ஒன்று தான்.
இதில் 3.2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறப்பான புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். இதன் மெமரி ஸ்லாட் இன்டர்னல் மற்றும் எக்ஸ்டர்னல் வசதிக்கும் எளிதாக சப்போர்ட் செய்யும்.
வைபை தொழில் நுட்பத்தின் தேவைகள் அதிகம் இருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த மொபைலை தாராளமாக தேர்வு செய்யலாம். நோக்கியா-311 மொபைல், ஜிபீஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பங்களையும் இந்த மொபைல் வழங்கும்.
எல்லா மொபைல்களிலும் 3ஜி தொழில் நுட்பத்தினை பெற முடிகிற போது இந்த மொபைலிலும் இந்த 3ஜி நெட்வொர்க் வசதி சாத்தியமாகிறது. கூடிய விரைவில் இந்த மொபைலின் விலை விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகும்.
......................................

No comments:

Post a Comment