கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: அழகு குறிப்பு செய்திகள்

Sunday 3 June 2012

அழகு குறிப்பு செய்திகள்


மேக்கப் போடுவதில் மட்டுமல்ல கலைப்பதிலும் கவனம் அவசியம்


திருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தால் உடனே மேக் அப் போட்டு கொண்டு அழகாய் வலம் வருவோம். நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்டவேண்டும். அழகாய் காட்டுவதற்கு நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலையாமல் பாதுகாக்க வேண்டும். மேக் அப் போடும் போது அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம்.

மேக் அப் போட ஆரம்பிக்கும் போதே போதுமான அளவில் மேக் அப் செய்து கொள்ள வேண்டும். மேக் அதிகமாக போட்டுவிட்டோமே என்று நினைப்பவர்கள் சிறிதளவு பஞ்சு எடுத்து அதிகமுள்ள இடங்களில் துடைக்கவும், அந்த இடத்தில் காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்.

அதிகப்படியான மேக் அப் செய்திருந்தால் அதனை சரி செய்ய பேஷியல் கிளன்சர் சிறந்த பொருளாகும். அதிகமாக இருக்கும் இடங்களில் கிளன்சர் போட்டு கழுவலாம். கன்னத்தில் அதிகமாக ரூஜ் அப்பிவிட்டால் பஞ்சு எடுத்து கன்னங்களில் உருட்டிவிட்டு சிறிதளவு காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்யலாம்.

கண் இமைகளின் மேல் ஐஷேடோ அதிகமாவிட்டால் சிறிதளவு கிரீம் போட்டு கழுவி விடலாம். உதடுகளில் லிப்ஸ்டிக் அதிகமாகிவிட்டால் பிளைன் டிஸ்யூ பேப்பர் வைத்து லேசாக உதட்டின் மேல் வைத்து ஒற்றி எடுக்கலாம். இவ்வாறு செய்தால் லிப்ஸ்டிக் அதிகமாக போட்டது போல தெரியாது.


பண்டிகை, திருவிழா மற்றும் பார்ட்டிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர், தூங்கச் செல்வதற்கு முன்பாக மேக்கப்பை நன்றாக கழுவி விடவும். இதனால் சருமத்தின் இயல்புத்தன்மை பாகாக்கப்படும். மேக் அப் போட்டபடியே தூங்குவது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சருமத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் மேக் அப் கலைத்து விட்டு தூங்குவது பாதுகாப்பானது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

மேக்கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு விடும். குறிப்பாக கண்களைச் சுற்றியிருக்கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்ததாகும்.

இரண்டு சொட்டு பேபி ஷாம்புவை எடுத்து கைவிரல்களில் தடவிக் கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும். பின்னர் நன்றாக கண்களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும் அழகும் பாதுகாக்கப்படும்.
.......................

சுட்டெரிக்கும் வெயிலில் வறண்டு போன சருமத்தை பொலிவாக்குவது எப்படி


கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வெயில் சருமத்துக்கு முக்கிய எதிரி. வெயில் காலத்தில் சருமம் வறண்டு, கருமையாகி, பொழிவிழந்து காணப்படும். அதை போக்கவே வெயில் காலத்தில் சருமத்தை புத்துணர்ச்சி அளிக்க பேஷியல், மெனிக்யூர், பெடிக்யூர் மற்றும் ஹெட் மசாஜை அறிமுகம் செய்துள்ளது கிரீன் டிரன்ட்ஸ் அழகு நிலையம். இதன் தலைமை நிர்வாகி கோபாலகிருஷ்ணன் இதோ உங்களுக்காக விளக்கம் 
அளிக்கிறார்...
சென்னையில் அதிக நாட்கள் சுட்டெரிக்கும் சூரியனைத் தான் பார்க்க முடியும். மற்ற காலங்களை விட சரும பாதிப்பு ஏற்படுவது கோடை வெயில் காலத்தில்தான். சருமத்தில் உள்ள நீர்சத்து குறைவதால் சருமம் பொலிவிழக்கும், கருமையாகும். சருமம் மட்டும் இல்லாமல் தலைமுடி கை, கால்களும் வறண்டு பாதங்களில் வெடிப்பு ஏற்படும். அதை சமாளிக்க வெயில் காலத்துக்கு ஏற்ப 4 விதமான அழகு குறிப்புகள்
சில் ரேடியன்ஸ் பேஷியல்: 
தர்பூசணி மற்றும் செர்ரி பழங்களின் கலவை கொண்ட கிரீம்களால் பேஷியல் செய்யப்படும். முதலில் முகத்தை சுத்தம்  செய்து, வறண்ட சருமத்தை நீக்கி, மசாஜ் செய்வதால் முகம் புத்துணர்ச்சியோடு காட்சியளிக்கும். இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி  ஆக்சிடெண்ட்கள் வெப்பத்தால் ஏற்படும் கருமையை போக்கி பளபளப்பாக்கி, ஈரப்பதம் அளித்து ஆரோக்கியமாக்கும்.
மிஸ்ட்டி ஹாண்ட்ஸ் அண்ட் பீட் மெனிக்யூர் பெடிக்யூர்
உடலிலுள்ள மற்ற பாகங்களை விட கைகள் மற்றும் கால்கள் நேரடியாக சூரிய வெப்பத்தால் பாதிப்படைகிறது. ராஸ்பெரி மற்றும் ஸ்பியர் மின்ட் கலவை கொண்டு கை மற்றும் கால்களில் மசாஜ் செய்து இறந்த போன தோல்களை  அகற்றுவோம். ராஸ்பெரி சரும நிறம் மாறுவதை தடுக்கிறது. ஸ்பியமினட், கிருமி நாசினியாக செயல்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்பட்ட பாதவெடிப்பை போக்க உதவுகிறது. 
கூல் ஹெட் மசாஜ்: 
மருதாணி மற்றும் செம்பருத்தி கொண்டு செய்யப்படும் ஆயில் மசாஜ், தலைமுடியின் நிறத்தை கூட்டி நன்கு ஊட்டமளிக்கும். இதில் உள்ள இயற்கை கண்டிஷன் முடிகளை பளபளப்பாக்கும்.

.............
எவ்வளவுதான் வெயிலடிச்சாலும் பொண்ணுங்க எப்படி பிரஷ்ஷா இருக்காங்க

பொண்ணுங்க எல்லாம் எப்பவும் தன்ன அழகா வச்சுக்கிற விஷயத்துல சர்வ ஜாக்கிரதையாக இருப்பாங்க. மழையோ அல்லது குளிரோ இப்ப வறுத்து எடுக்கிற வெயிலோ எதுவும் தன்ன பாதிச்சிடக் கூடாதுன்னு தனக்கு தெரிஞ்சவங்க கிட்டயெல்லாம் பியூட்டி டிப்ஸ் கேப்பாங்க. 

சென்னையில இப்ப வெயில் நூறு டிகிரிய தொடும்போதே டூ வீலர்ல போற பொண்ணுங்க துப்பட்டாவுல முகத்த மூடிக்கிட்டும், கண்ணுக்கு ரேபான் மாட்டிக்கிட்டும் விருட்டுன்ணு போறத பாத்திருப்பீங்க. நடந்துபோறவங்களும் அதே மாதிரிதான், ஆனா எக்ஸ்ட்ரா குடையோட. கொளுத்துற வெயிலுக்கு தங்கள எப்படி பாதுகாக்கிறாங்கன்னு கேட்டபோது: 

சாவித்திரி (சாப்ஃட்வேர் ஊழியர்) : தூங்கும்போது பப்பாளி பழம் பிளஸ் பன்னீர், கொஞ்சம் குங்குமப்பூ மூன்றையும் மிக்சியில் போட்டு பேஸ்டு மாதிரி தயார் பண்ணி முகத்தில் இருந்து கழுத்துவரைக்கும் அப்ளை பண்ணிக்குவேன். கண்ணுக்கு வெள்ளரி பிஞ்சுகள கட் பண்ணி பிக்ஸ் பண்ணிப்பேன். 
சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஜில் வாட்டர்ல வாஷ் பண்ணிக்குவேன். வாஷ் பண்ணும்போது முகமே புது பொலிவோட இருக்கும்.  

ரம்யா (கல்லூரி மாணவி) : முகத்துக்கு கடல மாவு, குங்குமப்பூ ஆகிய இரண்டையும் பன்னீரில் கலந்து அப்ளை பண்ணிக்குவேன். பிறகு அரை மணி நேரம் கழிச்சி குளிச்ச உடனே மொகமே கண்ணாடி மாதிரி பளிச்சின்னு இருக்கும். இது மறுநாள் காலை வரைக்கும் முகத்த பிரஷா வைச்சுக்க உதவும். 
அனுஷ்கா (கல்லூரி மாணவி): காலைல எழுந்தவுடனே பிரஷ் பண்ணிட்டு ரெண்டு இளநீர் குடிப்பேன். அதேபோல அதிக ஜூஸ் எடுத்துக்குவேன். இதுனால நாள் முழுக்க உடம்பு ரெப்பெரஷா இருக்க உதவும். அதே மாதிரி வீட்டுக்கு போனவுடனே வெயில் காரணமாக காலில் வெடிப்பு ஏற்பட்டம இருக்க ஒரு சின்ன பக்கெட்ல பாதியளவு தண்ணி, கொஞ்சம் பன்னீர், கொஞ்சம் குங்குமப்பூ கலந்து 30 முதல் 45 நிமிஷம் வரை ஊறவைப்பேன். இதனால பாதங்கள் வெடிப்பு இல்லாம சாப்டா இருக்க உதவும். 

கல்யாணி (கல்லூரி மாணவி): கூடுமானவரைக்கும் வெயிலில் அலையுற அவாய்ட் செய்தாலே போதும். நெறைய தண்ணீர் குடிக்கணும். நார் சத்து உள்ள பழங்கல சாப்பிட்டாலே போதும். என்ன மாதிரி நடுத்தர வர்க்க பெண்களுக்கு இதுவே ஹெல்த் கேர் டிப்ஸ். ரொம்ப ஸ்டெய்லிஷா இருக்கிறதுக்கு பெரிசா ஒன்னும் அலட்டிக்கிறது இல்ல.
...................

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்


கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குறைந்து காணப்படும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பங்கறை பொருட்களே போதுமானது. எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
கடலைமாவு மஞ்சள் பேஸ்ட்
தொன்று தொட்ட முதியோர் காலத்திலிருந்து பாரம்பரியப் பொருனாக பயன்படுத்தப்படும் பொருள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.
வழுவழுப்புக்கு கடலைமாவு பேஷியல்
அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.
ரோஸ் வாட்டர் கடலைமாவு
இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.
பருக்கள் நீங்க
கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் "பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ்வேண்டும். பருக்கள் இருந்த படிப்படியாக மறைந்து போகும்.
பிசுபிசுப்பான சருமத்திற்கு
சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொழிவுபெறும்.
டல் முகம் பொலிவாக
தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு "பேக்" போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.
.............

முகத்தில் ரோமங்கள் நீங்க---


சில பெண்களுக்கு முகத்தில் அதிக ரோமங்கள் காணப்படும்.முகத்தில் மட்டும்மல்ல கை,கால்,கழுத்து என பல இடங்களில்.
இதற்கான தீர்வு இதோ 
மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.
பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.
கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.
சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.
................

முகத்தை மட்டுமல்ல முதுகையும் பராமரிங்க


முகம் கை கால் என ஒவ்வொன்றிற்கும் தரும் முக்கியத்துவத்தை  முதுகு பகுதிக்கு தருவதில்லை. நம்மில் பெரும்பாலோனோர் அதிகம் 
கவனிக்காமல் விடும் பகுதியும் முதுகுதான். இதனால் முதுகு பகுதியில் அழுக்கு மற்றும் எண்ணெய் சேர்ந்து பருக்கள் தோன்றுவிடுகின்றன. எனவே முதுகை அழகுகாக்க கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். 
முதுகை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள அவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள். நீங்களும் உங்கள் முதுகின் அழகை எடுத்துக்காட்டும் ஆடைகளை அணிய ஆரம்பித்து விடுவீர்கள்.
முதுகுக்கு ஸ்க்ரப் செய்யலாம்
குளிக்கும் போது முகம், கை, கால்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவப்போல முதுகையும் கவனிக்க வேண்டும். தலைக்கு குளிக்கும் போது வழியும் எண்ணெய்கள் முதுகில்தான் தேங்குகின்றன. எனவே நீளமான பிரஷ் உபயோகித்து முதுகை நன்கு தேய்த்து சுத்தம் செய்யவேண்டும். முதுகுப் 
பகுதியை முழுவதாக சுத்தம் செய்ய இப்பொழுது நீண்ட கைப்பிடி உள்ள பிரஷ் கடைகளில் கிடைக்கிறது. அவற்றை வாங்கி உபயோகிக்கலாம்.
முதுகை `ஸ்க்ரப்' செய்வதால் உயிரிழந்த சருமம் அகன்று முதுகு புத்துயிர் பெறும். அவ்வாறு தொடர்ந்து செய்யும் போது புது சருமம் கிடைக்கும். கடையில் கிடைக்கும் ஸ்க்ரப் உபயோகிக்க விருப்பமில்லை என்றால், வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். உப்பு சிறந்த ஸ்க்ரப் ஆக பயன்படுகிறது. உப்பை நன்றாக பொடித்து அதை நன்றாக முதுகு, கழுத்துப் பகுதிகளில் தேய்த்து ஸ்க்ரப் செய்வதன் மூல இறந்த செல்கள் உதிர்ந்து விடும். ரத்த ஓட்டம் சீராகும்.
ஆலிவ் ஆயில் மற்றும் மசாஜ்
ஒரு சிலருக்கு முதுகு வறண்டு போய் விடும். இவர்கள் ஒரு ஸ்பூன் பேபி ஆயில் விட்டு நன்றாக முதுகுப் பகுதியை மசாஜ் செய்யவும். இதனால் 

முதுகு மென்மையாகும். இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் நான்கு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து 
முதுகை நன்றாக தேய்க்கவும். பிறகு கழுவவும். உலர்ந்த சருமத்திற்கு ஈரத்தன்மை கிடைக்கும்.

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் முதுகை கவனிக்காமல் விடுவதால் முதுகு மங்கலாகும். இதனால் முதுகில் கரும்புள்ளிகள், பரு தோன்றும். 

முதுகை அழகாக்கி பருவை போக்க இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன் ஆறு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து முதுகை நன்றாக தேய்த்து 
கழுவவும். எண்ணெய் பசை நீங்கி சருமம் பளிச் என்று ஆகும்.

வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும். உலர்ந்த பிறகு கழுவிவிடவும். இது முதுகிற்கு பொலிவு 

கிடைக்கும். இவை தவிர கூன் போடாமல் நிமிர்ந்து நடப்பதும் முதுகு சுருக்கமின்றி அழகாக தெரியும். அப்புறம் என்ன ஜன்னல் வைத்த  மற்றும் 
படிக்கட்டு வைத்த ஜாக்கெட் தைத்து போட்டு முதுகு அழகை அதிகரிக்கச் செய்யலாம்.

1 comment: