கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: News

Tuesday 5 June 2012

News


10-ம் வகுப்பு தேர்வு முடிவு : தஞ்சை மாணவன் ஸ்ரீநாத் முதலிடம்


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியானது. வழக்கம்போல மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்தவர்களில் தஞ்சை மாணவன் ஸ்ரீநாத் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். மொத்தம் 6 பேர் இரண்டாவது இடத்தையும், 11 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மாநில பாடத் திட்டம் மெட்ரிகுலேஷன், ஓஎஸ்எல்சி, ஆங்கிலோ இந்தியன் ஆகிய கல்வி வாரியங்கள் கடந்த ஆண்டு கலைக்கப்பட்டன. அதற்கு பதிலாக பொது கல்வி வாரியம் ஏற்படுத்தப்பட்டு கடந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புக்கும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. சமச்சீர் கல்வி அடிப்படையில் முதல்முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. தமிழ் மற்றும் ஆங்கில வழி என இரு பிரிவுகளில் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 10,312 பள்ளிகள் மூலம் சுமார் 10 லட்சத்து 50 ஆயிரத்து 922 பேர் தேர்வு எழுதினர். தனித் தேர்வர்கள் உள்பட மொத்தம் 11 லட்சத்து 46 ஆயிரத்து 340  பேர் தேர்வு எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை இன்று மதியம் 1.30 மணிக்கு வெளியிட்டது. வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 86.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.9 சதவீதம் அதிகமாகும். மாணவிகள் 88.9 (கடந்த ஆண்டு 88.1), மாணவர்கள் 83.4 (கடந்த ஆண்டு 82.3) சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழை முதன்மை பாடமாக கொண்டு படித்து தேர்வு எழுதியவர்களில் தஞ்சை பி.ஆர். மேல்நிலைப் பள்ளி மாணவர் ஸ்ரீநாத், 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் 6 பேர் இரண்டாவது இடத்தையும், 11 பேர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். பிற மொழியை முதன்மை பாடமாக எடுத்து படித்தவர்களில் பொன்னேரி டிஏவி பள்ளி மாணவி அஞ்சலா பேகம், அடையாறு செயின்ட் மைக்கேல் அகடமி மாணவி ரம்யா ஸ்ரீஷா, வேப்பேரி அகர்வால் வித்யாலயா மாணவி மித்திஷா சுரானா ஆகியோர் தலா 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

தமிழில் முதலிடம்

தமிழ் பாடத்தில் ஈரோடு எம்.பாளையம் இஎச்கேஎன் பள்ளி மாணவர் சிபி சக்கரவர்த்தி 100 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

சதம் அடித்தவர்கள் 

மொத்தம் 5 லட்சத்து 68 ஆயிரத்து 815 பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று முதல் வகுப்பில்  தேர்ச்சி பெற்றுள்ளனர். கணக்கு பாடத்தில் 1141 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 12 ஆயிரத்து 532 பேர் சென்டம் எடுத்திருந்தனர். இந்த ஆண்டு சுமார் 11 ஆயிரம் குறைந்துள்ளது. அறிவியல் பாடத்தில் 9237 பேரும் (கடந்த ஆண்டு 3677), சமூக அறிவியலில் 5305 (கடந்த ஆண்டு 756) பேரும் 100க்கு 100 பெற்றுள்ளனர். 
மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் பட்டியல்கள் 21-ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படுகிறது. 

தனித் தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் மாணவர்களின் போட்டோவும் இடம் பெறுகிறது. விடைத்தாள் நகல் பெறுவது, மறுகூட்டல் செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் 7-ம் தேதி வரை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் வழங்கப்படும். விண்ணப்பங்களை 7-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

……………..

பள்ளிகளில் நன்கொடை வசூல் : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்


  1. தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிப்பதை தடை செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.
  2. திருமுல்லைவாயலை சேர்ந்த மல்லிகா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது: தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிக்கப்படுகிறது. எஸ்பிஒஏ பள்ளியில் எல்கேஜியில் சேர்க்க ரூ.50 ஆயிரம் நன்கொடை கேட்கிறார்கள். இது குறித்து அரசுக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. 

  3. நன்கொடை வசூலிக்க தடை விதிக்க வேண்டும். நன்கொடை வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் விசாரித்து, இரண்டு வாரத்துக்குள் தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மனுதாரர் சார்பாக வக்கீல்கள் பி.வில்சன், ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜரானார்கள்.
  4. ……………..

விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக ஜூலைக்குள் அவசர சட்டம் : ஐகோர்ட்


விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் தொடர்பாக ஜூலைக்குள் அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி.நகரில் விதிமுறை மீறி கட்டப்பட்ட சுமார் 30 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சீலை அகற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் கட்டிட உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ஐகோர்ட் விசாரித்து, தமிழக அரசின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ÔÔ2007 ஜூலைக்கு முன்பு விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. விதிமுறை மீறி கட்டப்படும் புதிய கட்டிடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட திருத்தம் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும். இதற்கு 6 மாத அவகாசம் வேண்டும்ÕÕ என்றார். 

இதைக் கேட்ட தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர், எத்தனையோ சட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்றுகிறீர்கள். இதற்கு ஏன் 6 மாத அவகாசம் கேட்கிறீர்கள். முடிவு எடுத்துவிட்டால் விரைவாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டியதுதானே. நீண்ட அவகாசம் தரமுடியாது. ஜூலை 24க்குள் அவசர சட்டம் இயற்றி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர். இந்த வழக்கில் கட்டிட உரிமையாளர்கள் சார்பாக மூத்த வக்கீல்கள் அரிமாசுந்தரம், ரவிசங்கர் பிரசாத், பி.வில்சன், வக்கீல் ஆர்.மோகன் ஆகியோர் ஆஜரானார்கள்.

……………..

நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் 


தமிழகத்தில் சென்னை, சேலம், மதுரை, செங்கல்பட்டில் அரசு நர்சிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 200 இடங்கள் உள்ளன. அது மட்டுமல்லாமல் 130 தனியார் நர்சிங் கல்லூரிகள் உள்ளன. மேலும், இந்த ஆண்டு நிறைய கல்லூரிகள் புதிதாக அனுமதி வாங்கியுள்ளன. இந்த கல்லூரிகளில் பிஎஸ்சி(நர்சிங்), பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி(செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய்குறியியல் பட்டப்படிப்பு) பிஎஸ்சி ரேடியோ(டயக்னாசிஸ்) டெக்னாலஜி, பிஎஸ்சி, ரேடியோ தெரபி, பிஓடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது.

மேலும், www.tnhealth.org, www.tn.gov.in என்ற இணையத்திலும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் ஒரே பொது விண்ணப்பம் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செயலாளர், தேர்வுக்குழு, 162, ஈ.வே.ரா, பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 15ம் தேதி கடைசி நாள்.

………….

சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னை & திருப்பதிக்கு கூடுதல் சொகுசு பஸ்கள்


திருப்பதியில் நெரிசலை தவிர்க்க சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பதி & சென்னை இடையே கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆந்திர அரசு போக்குவரத்துக்கழக திருப்பதி மண்டல மேலாளர் (பொறுப்பு) கோபிநாத் நேற்று வெளியிட்ட அறிக்கை:

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த இரு தினங்களும் முக்கிய நகரங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. திருப்பதியில் இருந்து ஐதராபாத்துக்கு 2 வால்வோ பஸ், 4 சூப்பர் லக்சரி பஸ், பெங்களூருக்கு 2 வால்வோ பஸ், 4 சூப்பர் லக்சரி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னைக்கு 2 சூப்பர் லக்சரி பஸ், 1 டீலக்ஸ் பஸ், 6 எக்ஸ்பிரஸ் பஸ்கள், விஜயவாடாவுக்கு 2 சூப்பர் லக்சரி பஸ், ஒரு டீலக்ஸ் பஸ் இயக்கப்பட உள்ளது.

…………………

டெல்லி ஜி.ஹெச்.சில் 3 ஆண்டுகளில் 5,000 குழந்தைகள் சாவு


டெல்லி சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் 3 வருடத்தில் 5 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளன என்று தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தரப்பட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

டெல்லியில் அரசு நடத்தும் சப்தர்ஜங் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளில் இறந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மும்பையை சேர்ந்த அஜய் மராதி என்பவர் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து, தகவல் உரிமை ஆணையம் அளித்த விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

டெல்லி சப்தர்ஜங் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 48 மணி நேரத்துக்குள் 2,545 குழந்தைகள் இறந்திருக்கின்றன. இதில், பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 914. 2009&ம் ஆண்டு முதல் கடந்த 3 ஆண்டுகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்களில் 24,924 பேர் இறந்துள்ளனர். இதில் குழந்தைகள் வார்டில் இறந்தவர்கள் 5,382. இவற்றில் பிறந்ததும் இறந்த குழந்தைகள் எண்ணிக்கை 1,918. மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர்கள் 9108. தீக்காயம், பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் இறந்தவர்கள் 3,460 பேர். ஆபரேஷன் பலனின்றி இறந்தவர்கள் 2,755. அரசு நடத்தும் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகளில் நாட்டிலேயே பெரிய மருத்துவமனையாக விளங்குகிறது சப்தர்ஜங். இதில் கடந்த 3 ஆண்டுகளில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 950 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி அஜய் மராதி கூறுகையில், ‘கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக நாளொன்றுக்கு 4 பேர் வீதம் இறந்திருக்கிறார்கள். இதில் ஏராளமானவர்கள் பச்சிளம் குழந்தைகள். ஒவ்வொரு உயிரும் முக்கியமானது. அதை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்றுநோயால் இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்த விவரத்தை தர மறுத்துவிட்டனர்என்றார். 24,924 பேர் இறந்ததில் 10,542 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 48 மணி நேரத்துக்குள் இறந்திருக்கிறார்கள். 48 மணி நேரம் கழித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 14,382 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment