கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: Enterperner News

Friday 1 June 2012

Enterperner News

கலக்கல் லாபம் தரும் சீட் கவர் தயாரிப்பு 


வாகனங்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் சீட் கவர் தயாரித்து நேரடியாகவோ கடைகளுக்கோ விற்றால் லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை டவுன்ஹாலை சேர்ந்த அப்துல் ரசாக். அவர் கூறியதாவது : வாகனங்களின் சீட் கவர் தயாரிக்கும் கடையில் 15 ஆண்டாக வேலை பார்த்தேன். சம்பளம் குடும்ப தேவைக்கு போதவில்லை. கடந்த 5 ஆண்டுக்கு முன்பு சொந்தமாக சீட் கவர் தயாரிக்கும் கடை துவங்கினேன். இத்தொழிலில் பலர் இருந்தாலும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருவதால், வாகனங்களில் சீட் கவர் மாற்றும் தேவை நிரந்தரமாக உள்ளது. இதனால் தொடங்கியது முதலே தொழில் சீராக நடந்து கொண்டிருக்கிறது. இருசக்கர வாகனங்கள் பிராண்ட்களுக்கேற்ப சீட்கள் ஒன்றுக்கொன்று சிறிய அளவில் மாற்றம் இருக்கும். பல்வேறு இரு சக்கர வாகன சீட்களின் மாதிரிகளை நாம் வைத்திருந்தால் உடனடியாக தயாரித்துவிடலாம். 

சீட் கவரில் வாடிக்கையாளர்கள் டிசைன்கள், எழுத்துகளை வடிவமைக்க விரும்புகின்றனர். டிசைன் வேலைப்பாட்டுக்கேற்ப கூலி கிடைக்கும். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் சீட் கவரில் டிசைன்களை விரும்புகிறார்கள். பெண்கள் டிசைன் இல்லாத சீட் கவர்களை விரும்புகின்றனர். சீட் கவர் தயாரிக்க பெரிய அளவில் பயிற்சிகள் தேவை இல்லை. ஓரளவு தையல் தெரிந்தவர்களாக இருந்தால் போதும். இருசக்கர வாகன சீட் கவர் தயாரிப்பில் போதிய அனுபவம் இருந்தால் 4 சக்கர வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களுக்கு சீட் கவர் செய்து கொடுக்கலாம். நல்ல வருவாய் கிடைக்கும். 
இத்தொழிலை பெண்கள் வீட்டிலேயே செய்ய முடியும். மொத்த சீட் விற்பனை கடைகளில் ஆர்டர் எடுத்து செய்யலாம் அல்லது வெட்டி கொடுக்கும் பாகங்களை கொண்டு தைத்து கொடுக்கலாம். மழை, வெயிலில் நிறுத்தப்படுவதால், சீட் கவர்கள் அடிக்கடி கிழிந்து விடுகிறது. ஒரு சீட் கவர் 9 மாதம் வரை உழைக்கும். இதனால் நிரந்தர வேலை வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அப்துல் ரசாக் கூறினார். 
தயாரிக்கும் முறை
இரு சக்கர வாகனத்துக்குரிய சீட்டின் மாதிரி வடிவத்தை வைத்து, சீட்டின் மேல், இடது மற்றும் வலது புற பாகங்களை ரோசிலின் சீட்டில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை பார்டர் டேப் அல்லது பீடிங் வயரால் இணைத்து தைக்க வேண் டும். அதை ஸ்பாஞ்ச் மீது வைத்து இடது, வலது புறங்கள் வழியாக கீழ் புறம் வரை கவரை இறுக்க மாக கொண்டு வர வேண் டும். இப்போது ரோசிலின் சீட்டை ஸ்பாஞ்ச் மீது கன் சூட்டரால் அமுக்கினால் சீட் கவர் தயார். 

டிசைன் சீட் கவர் தயாரிக்க, டிசைன் இடம்பெறும் பகுதிகளுக்கு புள்ளி ரெக்சின் சீட் அல்லது சிம்பொனி சீட்டை தேவையான வண்ணங்களில், டை மூலம் வெட்டி கொள்ள வேண்டும். அதற்கு வடிவமைப்பு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். வெட்டிய டிசைன்களை ஏற்கனவே தயாரித்த சீட்டில் இணைத்து தைக்க வேண்டும். (சீட் கவர் பொருத்துவதற்கு முன்பு, இரு சக்கர வாகனத்தில் இருந்து பழைய சீட்டை டூல் கிட் மூலம் கழற்ற வேண்டும். அதில் ஸ்பாஞ்சின் மீதுள்ள கவரை அகற்ற வேண்டும்.) 
முதலீடு: டிசைன் வடிவமைப்பு இயந்திரம் ரூ.1.25 லட்சம், மின் தையல் இயந்திரம் ரூ.13 ஆயிரம், கம்ப்ரசருடன் இணைந்த கன் சூட்டர் ரூ.16 ஆயிரம், டூல் கிட் ரூ.2 ஆயிரம், பல்வேறு டிசைன் டை ரூ.15 ஆயிரம்,  சீட் கவர் மாதிரிகள் ரூ.4 ஆயிரம், கத்திரி 2 ரூ.1000, 10க்கு 16 அடி அளவுள்ள அறை அட்வான்ஸ் ரூ.15 ஆயிரம், ஒரு டேபிள் ரூ.4 ஆயிரம், ரேக் ரூ.4 ஆயிரம் என ரூ.2 லட்சம் தேவை.
உற்பத்தி பொருட்கள்: ரோசிலின் சீட், புள்ளி ரெக்சின் சீட், சிம்பொனி சீட், ஸ்பாஞ்ச், பீடிங் வயர், கருப்பு நிற நூல், பின். 
கிடைக்கும் இடங்கள்: டிசைன் வடிவமைப்பு இயந்திரம், கன்சூட்டர் ஆகியவை சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கிறது. மற்ற முதலீட்டு பொருள்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கும். உற்பத்தி பொருட்கள் பிரத்யேக ரெக்சின் கடைகளில் கிடைக்கிறது. 
உற்பத்தி செலவு (மாதத்துக்கு): ஒரு நாளில் 8 மணி நேரத்தில் 5 சீட் கவர்கள் வீதம் மாதம் 25 நாளில் 125 சீட் கவர் தயாரிக்கலாம். இதற்கு உற்பத்தி செலவு ரூ.14 ஆயிரம், கடை வாடகை ரூ.2 ஆயிரம், மின் கட்டணம் ரூ.400, உழைப்பு கூலி ரூ.6 ஆயிரம், இதர செலவுகள் ரூ.2 ஆயிரம் என ரூ.22,400 செலவாகும். ஒரு சீட் சராசரி உற்பத்தி செலவு ரூ.180 ஆகிறது. 
லாபம் (மாதத்துக்கு): ஒரு சாதாரண சீட் கவர் ரூ.250, டிசைன் சீட் கவர் ரூ.350க்கு விற்கப்படுகிறது. 75 சாதாரண சீட் கவர் விற்பதன் மூலம் ரூ.18,750, 50 டிசைன் கவர் விற்பதன் மூலம் ரூ.17,500 என மொத்த வருவாய் ரூ.36,250. இதில் செலவு போக லாபம் ரூ.13,850.
சந்தை வாய்ப்பு 
இரு சக்கர வாகன விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில  வாகன விற்பனை நிலையங்களில் மட்டுமே சீட் தயாரித்து விற்கின்றனர். அதிலும் பிளெய்னாக உள்ள சீட்கள் மட்டும் கிடைக்கிறது. தாங்கள் விரும்பும் நிறம் மற்றும் டிசைன் உள்ள சீட் கவரை பெற வெளியில் உள்ள கடைகளையே நாடுவதால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள். சீட் கவர்கள் சேதமடைந்தால் அவற்றை மாற்றவும் பழைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.  இரு சக்கர வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் சீட் கவர் மொத்த விற்பனை நிலையங்களுக்கும் ரெடிமேடு சீட் கவர்களை சப்ளை செய்யலாம். நல்ல கிராக்கி உள்ளது. 
...............

நேந்திரன் சிப்ஸ்.. விவசாயிகளே தயாரித்தால் லாபம்


ரசாயன உரம் தவிர்த்து இயற்கை முறையில் சாகுபடி செய்து, தங்கள் விளைபொருட்களை விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பது லாபகரமானது. இயற்கை முறையில் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் இணைந்து  சிப்ஸ் தயாரித்து விற்று  நல்ல லாபம் அடைந்து வருகிறோம் என்று கூறுகிறார் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த சுந்தரம். அவர் கூறியதாவது:
45 ஆண்டாக விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 8 ஆண்டாக ரசாயன உரம் தவிர்த்து முழுமையான இயற்கை உரம் மூலம் நேந்திரன் வாழை சாகுபடி செய்து வருகிறேன். இந்த முறையால் இடுபொருள் செலவு குறைவு.  மகசூல் அதிகம். உற்பத்தியாகும் பொருளும் ஆரோக்கியமானது. பகலில் உழைத்து, இரவில் காவல் காத்து அறுவடை செய்தால், அதற்குண்டான விலை கிடைப்பதில்லை. ரசாயன உரத்தால் தயாராகும் விளைபொருளுக்கு என்ன விலையோ அந்த விலைதான் கிடைக்கிறது. வாங்குபவர் நிர்ணயிப்பதுதான் விலையாக உள்ளது. போட்டி நிறைந்த வாழைத்தார் நேரடி விற்ப னையை தவிர்த்து, வாழைக் காயை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்றால் பலன் உண்டு. இதனால் நேந்திரன் வாழைக்காயை சிப்ஸாக தயாரிக்க முடிவெடுத்தேன். 

3 ஏக்கர் நிலத்தில் விளையும் நேந்திரன் வாழைத்தார் மட்டும் சிப்ஸ் தயாரிப்புக்கு போதாது என்பதால், இயற்கை விவசாயம் மூலம் நேந்திரன் தயாரிக்கும் மற்ற விவசாயிகளையும் சேர்த்து கூட்டாக சிப்ஸ் தயாரிக்கிறேன். மாருதி ஆர்கானிக் பார்ம்ஸ் நிறுவனத்தை துவக்கி, தமிழ்நாடு இயற்கை விவசாய வளர்ச்சி மையத்தில் பதிவு செய்துள்ளோம். நிறுவனத்தில் மேலும் இப்பகுதியில் உள்ள இயற்கை நேந்திரன் வாழை விவசாயிகளையும் இணைத்து கூடுதலாக தயாரிக்க உள்ளோம். சிப்ஸ் தயாரிப்புக்கு இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட தேங்காயில் இருந்து பிழியப்பட்ட எண்ணெயை பயன்படுத்துகிறோம். நேந்திரன் வாழைத்தாரை மதிப்பு கூட்டப்பட்ட சிப்ஸாக விற்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது. வாழைத்தாராக விற்றபோது ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியில் விளைவிக்கப்படும் விளைபொருளை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்றால் நல்ல லாபம் பெறலாம். 
கட்டமைப்பு, முதலீடு: நான்கு  தூண்கள் நட்டு ஷெட் அமைக்க வேண்டும் (செலவு-ரூ.10,000). அதில் மரத்தூள் போட்டு எரிக்கப்படும் அடுப்பு கட்ட வேண்டும். (ரூ. 3000) இரும்பிலான எண்ணெய்  சட்டி 1 ( ரூ.1,750), கரண்டி, எண்ணெய் வடிகட்டி சட்டி 2, வாழைக்காய் சீவும் கருவி 2, உரித்த வாழைக்காய் அலச வாளி 2, பொரித்த சிப்ஸ் வைக்க பிளாஸ்டிக் கூடை 2 ஆகியவை வேண்டும் (ரூ.2,250.)  எடை மெஷின் ரூ.3,500, சீலிங் மெஷின் ரூ.3000 என மொத்த முதலீடு ரூ.23,500.
கிடைக்கும் இடங்கள்: அடுப்பை கட்டிட தொழிலாளர்களே கட்டி கொடுப்பார்கள். அடுப்பு எரிக்க மரத்தூள், கடலை தோல், முந்திரி தோல் ஆகியவற்றை பயன்படுத்தலாம். அவை எளிதில் கிடைக்கிறது. நேந்திரன் வாழைக்காய்களை விவசாயம் செய்யாதவர்கள், அவற்றை சந்தை மற்றும் கூட்டுறவு சங்கங்களில் நடக்கும் ஏலங்களில் கொள்முதல் செய்யலாம். இதர பொருள்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கிறது.
உற்பத்தி செலவு (ஒரு நாளைக்கு): ஒரு நாளைக்கு 50 கிலோ சிப்ஸ் தயாரிக்கலாம். அதற்கு 150 கிலோ நேந்திரன் வாழைக்காய் வேண்டும். கிலோ சராசரி விலை ரூ.16 வீதம் ரூ.2,400, தேங்காய் எண்ணெய் 1 டின் 17 கிலோ  ரூ.2,380, எரிபொருள் கிலோவுக்கு ரூ.7 வீதம் ரூ.350, நேந்திரன் சிப்ஸ் பொரிக்கும் தொழிலாளர் கூலி 2 பேருக்கு மொத்தம் ரூ.600, பேக்கிங் செலவு ரூ.150 என மொத்தம் ரூ.5,880. (ஒரு கிலோ சிப்ஸ் சராசரி உற்பத்தி செலவு ரூ.118). 
வருவாய் (ஒரு நாளைக்கு):  நேந்திரன் சிப்ஸ் ஒரு கிலோ குறைந்தபட்சம் கிலோ ரூ.160, அதிகபட்சம் ரூ.180 வரை விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாள் குறைந்தபட்ச வருவாய் ரூ.8,000. குறைந்தபட்ச லாபம் ரூ.2,120, அதிகபட்ச வருவாய் ரூ.9,000. அதிகபட்ச லாபம் 3,120.
சந்தை வாய்ப்பு: டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் பேக்கரிகளில் இயற்கை விவசாயத்தால் விளைந்த பொருட்களை விற்பனை செய்யும் பிரிவுகள் தனியாக உள்ளன. அங்கு விற்பனை செய்யலாம். அதோடு வழக்கமான சிப்ஸ்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் விற்கலாம். தரமான நேந்திரன் சிப்ஸ், கடைகளில் சில்லரை விலையாக கிலோ ரூ.250 முதல் ரூ.260 வரை விற்கின்றனர். உற்பத்தி செய்பவர்களிடம் ரூ.160 முதல் ரூ.180க்கு கொள்முதல் செய்வதால் அவர்களுக்கு நல்ல லாபம் உள்ளது. தரமான சிப்ஸ்களுக்கு வரவேற்பு உள்ளது. சிப்ஸ்கள் 2 மாதம் வரை கெடாது. ருசியும் பலருக்கு பிடிப்பதால் சந்தை வாய்ப்பு தொடர்ந்து இருக்கும். 
தயாரிப்பது எப்படி?
நேந்திரன் வாழைக்காய்கள் பச்சையாக இருக்க வேண்டும். சிறு கத்தியால் வாழைக்காயின் மேல் இருந்து கீழாக தோலில் கீற வேண்டும். கீறிய தோலுக்குள் உள்ளே கத்தியை நுழைத்து காய்க்கும், தோலுக்கும் இடையே நெம்ப வேண்டும். பின்னர் கை விரல்களால் நெம்பினால் தோலை முழுதாக உரித்து விடலாம். பின்னர் அதை நல்ல தண்ணீரில் அலசிய பின், காய்ந்த எண்ணெயில் நேரடியாக வட்டமாக சீவி போட வேண்டும். எண்ணெயில் விழும் நேந்திரன் துண்டுகள் பொரியும் போது சத்தம் வரும், அது லேசாக அடங்கும் போது ஒரு குழிக்கரண்டியில் உப்புத் தண்ணீரை அள்ளி எண்ணெயில் ஊற்ற வேண்டும். சட்டியில் சிப்ஸ் மீண்டும் சத்தத்துடன் பொரியும். சத்தம் அடங்கிய பின், சிப்ஸ்களை கரண்டியில் அள்ளி, தூக்கிப்போட்டு பிடித்தால் சலசலவென சத்தம் கேட் கும். அப்படி கேட்டால் நன் றாக வெந்து விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதை வடிகட்டி சட்டியில் போட்டு சில நிமிடங்களுக்கு பிறகு அதை, 200, 250 கிராம் வீதம் எடை போட்டு பேக்கிங் செய்யலாம். 
....................

சமோசா தயாரிப்பில் சூப்பர் லாபம்


மற்ற எண்ணெய் பலகாரங்களை விட சமோசாவின் ருசி பலருக்கு பிடிக்கும். மேலும் கடைக்காரர்கள் சமோசா தயாரிப்பதில்லை. வெளியே வாங்கியே விற்கின்றனர். நல்ல தரம் மற்றும் சுவையோடு சமோசா தயாரித்து விற்பது லாபகரமான தொழில் என்று கூறுகிறார், கோவை மாவட்டம், சூலூரை சேர்ந்த ஜேம்ஸ். அவர் கூறியதாவது: தேவகோட்டையை சேர்ந்த நான் 13 வயதில் பிழைப்பு தேடி கோவை வந்தேன். ஓட்டல்களில் பல்வேறு வேலைகளை செய்து, பிறகு சமையல் மாஸ்டர் ஆனேன். பிறகு கோவையில் சமோசா தயாரிப்பவர்களிடம் தினசரி ஆயிரம் சமோசாக்களை மொத்தமாக வாங்கி சூலூரில் உள்ள கடைகளில் 3 ஆண்டு விற்றேன். அதில் ஓரளவு வருமானம் கிடைத்தது. பின்னர் சமோசா தயாரிக்கும் தொழிலை ரூ.10 ஆயிரத்தில் துவக்கினேன். 10 ஆண்டாக சமோசா தயாரித்து வருகிறேன். 

நானும் எனது மனைவியும் தினசரி 2 ஆயிரம் சமோசா தயாரிக்கிறோம்.  ஆயிரம் சமோசாவை நேரில் கடைகளுக்கு கொண்டுசென்று விற்கிறேன். மீதி ஆயிரத்தை சிறு வியாபாரிகளுக்கு விற்று விடுகிறேன். எங்களை தவிர சூலூரில் மேலும் ஒருவர் 2 ஆயிரம் சமோசா தயாரித்து சப்ளை செய்கிறார். அந்தளவுக்கு சமோசா தேவை இருக்கிறது. இதுபோல் எல்லா ஊரிலும் சமோசாவுக்கு கிராக்கி உள்ளது. சமோசா தொழிலில் தயாரித்து சப்ளை செய்வது, அதற்குரிய பணத்தை வசூல் செய்வது என வேலைகள் இருக்கும். தரம், சுவை இரு ந்தால் நாம் சப்ளை செய்யும் சமோசாவுக்கு கிராக்கி இருக்கும். டீ கடை, பேக்கரி உரிமையாளர்கள் தேடி வந்து வாங்குவர். சமோசாவுக்கு முக்கிய மூலப்பொருளான வெங்காய விலை கிலோ ரூ.10க்குள் இருந்தால் உற்பத்தி செலவு கட்டுப்படியாகும். இல்லாவிட்டால் வெங்காயத்துக்கு பதில் முட்டைக்கோஸ், கேரட், உருளைக்கிழங்கு துண்டுகள் பயன்படுத்தலாம். சுவை மாறுபடுவதால் வாடிக்கையாளர் களுக்கும் அது பிடிக்கும். சமோசா விற்பனை இல்லாத ஊர்களில் நாமே கொண்டு சென்று விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம். 
கட்டமைப்பு, முதலீடு
சமையலறை போதுமானது. கடலைத்தோல் அல்லது மரத்தூள் போட்டு எரிக்கப்படும் அடுப்பு (ரூ.10 ஆயிரம்). மாவு தேய்க்கும் கடப்பா கல் மேடை, மற்ற உபயோகத்திற்கு ஒரு டேபிள் (தலா ரூ.1000 வீதம் ரூ.2 ஆயிரம்), இரும்பிலான வடை சட்டி 1 ( ரூ.1,800), இரும்பிலான வடை கரண்டி 1 (ரூ.150), எண்ணெய் வடிகட்டி சட்டி 2 (ரூ.400), பாலிதீன் விரிப்பு 1 (ரூ.100), சிறிய கத்தி 2 (ரூ.60), பெரிய கத்தி 1 (ரூ.250), அட்டை பெட்டிகள் 4 (ரூ.40). சப்பாத்தி தேய்க்கும் கட்டை 1 ரூ.50, சப்பாத்தி சுடும் தோசை கல் 1 ரூ.550. மொத்தம் ரூ.15,400 ஆயிரம் தேவை.
ரெடிமேடாக அடுப்பு உள்ளது. அல்லது அதை கட்டி கொடுப்பவர்களும் உள்ளனர்.  மரத்தூள், கடலை தோல் ஆகியவற்றை எல்லா ஊரிலும் சப்ளை செய்பவர்கள் உள்ளனர். இதர பொருட்களை ஹார்டுவேர்ஸ், மளிகை மற்றும் காய்கறி கடைகளில் வாங்கி கொள்ளலாம்.
உற்பத்தி செலவு (ஒரு நாளைக்கு): : 2 ஆயிரம் சமோசா தயாரிக்க 25 கிலோ மைதா மாவு ரூ.540, கல் உப்பு முக்கால் கிலோ ரூ.3, சமையல் எண்ணெய் 8 லிட்டர் ரூ.480, பெரிய வெங்காயம் 25 கிலோ ரூ.250, மிளகாய் பொடி 250 கிராம் ரூ.40, கடலை தோல் அல்லது மரத்தூள் அரை மூட்டை ரூ.50. மின்கட்டணம் ரூ.5, இட வாடகை ரூ.35, வாகன பெட்ரோல் செலவு ரூ.70, இதர செலவுகள் ரூ.100, 2 நபர் கூலி தலா ரூ.250 வீதம் ரூ.500 என ஒரு நாளைக்கு ரூ.2,073.
வருவாய் (ஒரு நாளைக்கு) : டீ கடை மற்றும் பேக்கரிகளுக்கு ஒரு சமோசா ரூ.1.50க்கு விற்கப்படுகிறது. உற்பத்தி செய்பவர் நேரில் கடைகளுக்கு விற்பனை செய்தால் 2 ஆயிரம் சமோசா ரூ.1.50 வீதம் வருவாய் ரூ.3 ஆயிரம். ஒரு நாள் உற்பத்தி செலவு போக லாபம் ரூ.927. சிறு வியாபாரிகளுக்கு விற்றால் ஒரு சமோசா ரூ.1.20க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தியாளருக்கு வருவாய் ரூ.2,400. லாபம் ரூ.327. இதில் நேரில் விற்பது கூடுதல் லாபத்தை தரக்கூடியது. கூலியாட்களை வைத்து சப்ளை செய்து கூடுதல் லாபத்தை சம்பாதிக்கலாம். சமோசாவில் சற்று பெரிய அளவில் தயாரித்தால் ரூ.2க்கு விற்கலாம். சமோசா பெரிய அளவாக இருந்தால் உற்பத்தி எண்ணிக்கை குறையும். லாபம் குறையாது. 
சந்தை வாய்ப்பு : வடை, போண்டா சுடுவது போல் சமோசா தயாரிப்பது எளிதல்ல. அதற்கு முன் உழைப்பும், நேரமும் அதிகம் தேவை. இதனால் டீ கடை மற்றும் பேக்கரி கடைக்காரர்கள் சமோசாவை சொந்தமாக தயாரித்து விற்க ஆர்வம் காட்டுவதில்லை. வெளியே யாராவது தயாரித்து கொடுத்தால் அதை ரூ.1.50க்கு வாங்கி ரூ.2 முதல் ரூ.2.50 வரை விற்கிறார்கள். சமோசாவிற்கு 50 காசு முதல் ரூ.1 வரை அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது. இதனால் தரமாக, சுவையாக சப்ளை செய்பவர்களுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது.
தயாரிப்பது எப்படி?
மைதா மாவு 25 கிலோவுக்கு 15 லிட்டர் தண்ணீர், அரை கிலோ உப்பு சேர்த்து பிசைய வேண்டும். மாவை மொத்தமாக திரட்டி எண்ணெய் தடவி, கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மாவை 80 சிறு, சிறு உருண்டையாக்க வேண்டும். அதை சப்பாத்தி கட்டையால் ஒன்றரை அடி அகலத்துக்கு வட்டமாக மெல்லிதாக தேய்க்க வேண்டும். அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்க வேண்டும். ஒட்டாமல் இருக்க, ஒவ்வொன்றின் மீதும் எண்ணெய் தடவி அடுக்க வேண்டும். இவ்வாறு அடுக்கப்பட்ட 10 வட்டத்தை ஒன்றாக அடுக்கி ஒரு தேய்ப்பு தேய்த்து, பெரிய கல்லில் சுட வேண்டும். அடிப்புறம் வெந்ததும் திருப்பி போட வேண்டும். மேல்புறம் வெந்த பகுதியை  தனியாக பிரித்தெடுக்க வேண்டும். அதற்குள் கீழ்புறம் வெந்துவிடும். அதை புரட்டி போட்டு, பிரித்து எடுக்க வேண்டும். இப்படியே 10 வட்டத்தையும் பிரித்தெடுத்த பின்,  மீண்டும் ஒன்றாக அடுக்கி, ஒரு சமோசாவுக்கு தேவையான அளவுக்கு (சுமார் 5க்கு2 இஞ்ச் நீள அகலம்) பெரிய கத்தியால் வெட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு 80 உருண்டையையும் தேய்த்து சுட்டு எடுத்து, அடுக்கி வெட்டினால் 2 ஆயிரம் துண்டுகள் கிடைக்கும். அதை  தனித்தனியாக முக்கோண வடிவில்  சுருட்ட வேண்டும். திறப்பிற்குள் உப்பு, மிளகாய்தூள், நறுக்கிய வெங்காய கலவையை போட்டு மூடி, கரைத்து வைத்த மைதா மாவை பசை போல தடவி ஒட்ட வேண்டும். எண்ணெய் சட்டியில் 100 முதல் 150 எண்ணிக்கையிலான சமோசாவை ஒரு நேரத்தில் போட்டு பொரித்து எடுத்து, எண்ணெய் வடிகட்டியில் சில நிமிடங்கள் வைத்திருந்து எடுத்தால் சமோசா தயார்.
..........................

காசு கொழிக்கும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு


‘சமீப காலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்க நகை அணிந்து செல்லவே பெண்கள் அஞ்சுகின்றனர். மேலும் ஜெட் வேகத்தில்  தங்கம் விலை உயர்வதால் நடுத்தர குடும்பத்து பெண்கள் தங்க நகைகளை நினைத்து கூட பார்க்க முடிவதில்லை. கிரிஸ்டல் நகைகள் விலை குறைவு. அதேவேளையில்  பார்ப்பதற்கு ஆடம்பரமாக காட்சியளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள்  கிரிஸ்டல் நகைகளை அணியவே விரும்புகின்றனர். பெண்கள் வீட்டில் இருந்தபடி செய்ய ஏற்ற தொழில் கிரிஸ்டல் நகை தயாரிப்பு. இதில்  நல்ல லாபமும் சம்பாதிக்கலாம்’ என்கிறார்கள் கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்த செல்வி, ரம்யஜோதி. அவர்கள் கூறியதாவது: தையல் பயிற்சி நிலையத்தில் எங்களுக்கு ஒருவர் கிரிஸ்டல் நகை தயாரிப்பு குறித்து  இவருடன் சேர்ந்து பயிற்சி அளித்தார். பின்னர் இருவரும் சேர்ந்து கிரிஸ்டல் நகை தயாரிப்பை ரூ.5 ஆயிரம் முதலீட்டில் துவக்கினோம். கோவைக்கு வாரம் ஒருநாள் சென்று, உற்பத்தி பொருட்களை வாங்குவோம். வீட்டு வேலை இல்லாத நேரங்களில் இருவரும் சேர்ந்தோ, தனியாகவோ நகைகளை கோர்ப்போம். இதனால் உற்பத்தி அதிகரித்தது.

ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக செய்யத் தொடங்கிய நாங்கள், தயாரித்த நகைகளை அக்கம்பக்கத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு விற்றோம். இதில் நல்ல லாபம் கிடைத்தது. வீட்டில் உள்ளவர்கள் ஊக்குவித்தனர். அதிகளவில் உற்பத்தி செய்து அருகில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு விற்று விற்பனையை அதிகப்படுத்தினோம். பள்ளி மாணவிகளையும் எங்கள் கிரிஸ்டல் நகை கவர்ந்தது. விலை  மிகவும் குறைவாக இருப்பதோடு விரும்பிய மாடலில் கிடைப்பதால், பல பெண்கள் ஆர்வத்தோடு வாங்குகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகள் அவரவர் உடைக்கேற்ப மேட்சிங்காக அணிய, பல்வேறு வண்ணங்களில் கிரிஸ்டல் நகைகளுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். நாங்கள் கலைநயத்தோடு செய்கிறோம். எங்கள் நகைகளை பார்ப்பவர்கள் உடனே தொடர்பு கொண்டு ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். அதன் மூலம் உற்பத்தி படிப்படியாக உயர்ந்து வருகிறது. விலை குறைவோடு தரமாகவும் தயாரிப்பதால், எதிர்பார்த்ததை விட வரவேற்பு அதிகமாக உள்ளது. ஒளியை பிரதிபலித்து மின்னுவதால் லைட் கலர் கிரிஸ்டல் நகைகளை இளம்பெண்கள் விரும்பி வாங்குகின்றனர்.  பெரியவர்கள் அடர் வண்ண  கிரிஸ்டல் நகைகளை விரும்புகின்றனர். பொறுமையும், அழகுணர்ச்சியும் உள்ளவர்கள் புதுப்புது டிசைன்களில் கிரிஸ்டல் நகையை உருவாக்கலாம். இதன் மூலம் எளிதில் வாடிக்கையாளர்களை பெருக்க முடியும். பெண்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய ஏற்ற தொழில் இது. பெரியளவில் பயிற்சி எதுவும் தேவையில்லை.  
உற்பத்தி செலவு (ஒரு நாளைக்கு): ஒரு நபர் ஒரு நாளில் 8 மணி நேரத்தில் சிறிய அளவு கிரிஸ்டல் நகை 50 தயாரிக்கலாம். நடுத்தர அளவு என்றால் 15, பெரிய அளவு என்றால் 20 தயாரிக்க முடியும். சிறிய அளவு நகைக்கு ரூ.90 முதல் ரூ.110 வரை செலவாகும். நடுத்த அளவுக்கு ரூ.150 முதல் ரூ.160 வரையும், பெரிய அளவுக்கு ரூ.200ம் செலவாகும்.  சிறிய அளவிலான 50 கிரிஸ்டல் நகை கள் தயாரிக்க உற்பத்தி செலவு ரூ.5,500. நடுத்தர அளவு 15 நகை தயாரிக்க ரூ.2,600, பெரிய அளவு 20 நகை  தயாரிக்க ரூ.4,000 தேவைப்படும். அனை த்து வகைகளையும் கலந்து தயாரிக்க சராசரியாக ரூ.5 ஆயிரம் போதும். 
வருவாய் (ஒரு நாளைக்கு): ஒரு நாள் உற்பத்தியாகும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான கிரிஸ்டல் நகைகளை குறைந்தபட்சம் 30 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்க முடியும். இதன் மூலம் ஒரு நாள் வருவாய் ரூ.6,500 இதில் லாபம்  ரூ.1,500.  இதை உழைப்பு கூலியாகவும் எடுத்து கொள்ளலாம். கூட்டாக சேர்ந்து தயாரித்தால் லாபம் இரு மடங்காக அதிகரிக்கும்.  ஒரு நாள் தயாரித்ததை விற்ற பின், அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு அடுத்த உற்பத்தியை தொடங்கலாம். இது வீட்டில் இருந்தவாறு தொழில் செய்பவர்களுக்கு பொருந்தும். விற்பனை அளவுக்குகேற்ப உற்பத்தியை அதிகரித்தால், வருவாய் கூடும்.   
சந்தை வாய்ப்பு: சேலை மட்டுமல்லாமல் சுடிதார், சல்வார் உள்ளிட்ட நவீன ஆடைகளுக்கு ஏற்றபடி அணிய கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கலாம். இவற்றை இளம்பெண்கள் விரும்பி வாங்குவார்கள். குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.300க்குள் கிடைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பொலிவு குன்றாமல் காட்சியளிக்கும். கலைநயத்தோடு இருப்பதால் வயதானவர்களும் விரும்பி வாங்குவார்கள். தோழிகளுக்கு பரிசளிக்கவும் பெண்கள் இவற்றை விரும்பி வாங்குகின்றனர்.  கிரிஸ்டல்  செயின் மட்டுமல்லாமல், கிரிஸ்டல் தோடு, கிரிஸ்டல் கொலுசு ஆகியவற்றையும் எளிதில் தயாரிக்கலாம். தனிப்பட்ட முறையில் விற்பது மட்டுமல்லாமல் பேன்சி ஸ்டோர்கள், கவரிங் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். 
தயாரிப்பது எப்படி?
கிரிஸ்டல் நகை தயாரிப்பு என்பது தங்க, வெள்ளி நகைகளை போல் உருக்கி, தட்டி செய்வதல்ல. ரெடிமேடாக உள்ள பல வண்ண கிரிஸ்டல் மற்றும் இணைப்பு பொருட்களான சக்கரியா, பால் ஆகியவற்றை சேர்த்து கோர்ப்பதுதான்.  சிறுமிகள், இளம்பெண்கள், வயதானவர்கள்  அணிவதற்கேற்ப குறைந்த நீளம் (ஒரு அடி), நடுத்தர நீளம் (ஒன்றரை அடி), அதிக நீளம் (2 அடி) ஆகிய அளவுகளில் கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. முதலில் கிரிஸ்டல் வயர் கம்பியை கட் டரை கொண்டு தேவையான அளவுகளில் வெட்டி கொள்ள வேண்டும். 2 பேர் கூட்டாக செய்தால்,  முதலில் டாலரை கோர்த்து நடுவில் தொங்கவிட்டு, இரு முனைகளில் ஒரு பால், ஒரு சக்கரியா, ஒரு கிரிஸ்டல் கல் ஆகியவற்றை வரிசைப்படி கோர்க்க வேண்டும். அதே பாணியில் தொடர்ந்து கோர்த்து வர வேண்டும். இவ்வாறு இருபுறமும் கோர்த்து முடிக்கும் இடத்தில் கியர் லாக்கை கோர்த்து கட்டிங் பிளேயர் மூலம் முடிச்சு போட வேண்டும். இங்கு ஊக்கு, காந்தம் அல்லது ஸ்க்ரூ பொருத்தினால் கிரிஸ்டல் நகை ரெடி.

தேவையான பொருட்கள்: இளம் மற்றும் அடர்த்தியான பல வண்ண கிரிஸ்டல் சிறியது முதல் பெரியது வரையில் 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 ஆகிய எண்களில் கிடைக்கும். எண் 2 கிரிஸ்டல் 90 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.65. எண் 4 ரூ.75, எண் 6 ரூ.95, எண் 8 முதல் 18 வரை ரூ.100. சக்கரியா 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.52, கோல்டு பால் 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.19. கியர் வயர், கோல்டு மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும். 100 மீட்டர் கொண்ட ஒரு ரோல் ரூ.65. கியர் லாக் 100 எண்ணிக்கையுள்ள ஒரு பாக்கெட் ரூ.52. ஊக்கு ஒரு செட் ரூ.7, காந்த ஊக்கு ஒன்று ரூ.10, ஸ்க்ரூ செட் ரூ.7 முதல் ரூ.10. கட்டர், பிளேயர் ஆகியவை தலா ரூ.100. நகரங்களில் உள்ள பேன்சி ஸ்டோர்களில் இந்த பொருட்கள் கிடைக்கின்றன.

No comments:

Post a Comment